நான்லாம் இன்ஃபுளுயன்ஸ் செய்ய ஆரம்பிச்சா.. செமயா செய்வேன்.. அக்ஷராவை வெளுத்துவாங்கிய பிரியங்கா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அக்ஷரா சொன்ன ஒரு வார்த்தையால் செம சூடானார் பிரியங்கா.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே அக்ஷராவுக்கும் பிரியங்காவுக்கும் ஆகாமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தான் அக்ஷராவை டார்கெட் செய்யாமல் உள்ளார் பிரியங்கா.
இதுவரை நிரூப் தான் தன்னுடைய நண்பன் என கூறி வந்த பிரியங்கா, அபிஷேக் வந்த பிறகு அவருடன் மோதலில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த வாரம் நாமினேஷன் புராசஸில் முதல் முறையாக நிரூப்பை நாமினேட் செய்தார் பிரியங்கா.

எப்போதும் பாவனி பின்னால்
அபிஷேக் இருந்த வரை அவரது சப்போர்ட்டில் இருந்து வந்த பிரியங்கா அவர் சென்ற பிறகு, அபினய், அமீர், பாவனி என புதிய நட்பு வட்டத்தில் இணைந்துள்ளார். அபினய், பிக்பாஸ் வீட்டில் பாவனியை தவிர வேறு யாருமே இல்லை என்பதை போல எப்போதும் அவருடனே சுற்றி வருகிறார்.

போட்டுக்கொடுத்த அபினய்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாத்ரூம் ஏரியாவில் அபினய், பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நான் உங்கள் இவரால் ஸ்பாயில் ஆகிறேன் என்று அக்ஷரா கூறுகிறார் என்று அக்ஷரா அவரிடம் கூறியதை பிரியங்கா மற்றும் பாவனியிடம் கூறினார் அபினய்.

திடீர்னு அப்படி திடீர்னு இப்படி
இதனைக் கேட்டு கடுப்பான பிரியங்கா நான் அவரை நோண்டவே இல்லை. நான் என் வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். அவர் அவருடைய வேலைய பார்க்கிறார். எதற்கு இப்படி பேச வேண்டும். திடீர்னு ஜெனிலியா மாதிரி பண்ணுவாங்க, திடீர்னு அதிரடியா நடந்துப்பாங்க, கண்ணாடி உடைஞ்சுருச்சுன்னு சொன்னா அழுவாங்க.. என நடித்துக் காட்டினார்.

செமயா இன்ஃபுளுயன்ஸ் செய்வேன்
தொடர்ந்து பேசிய பிரியங்கா, யாரு நீ? அன்னைக்கு டாஸ்க்குல 4 சேரை அடிச்சு நொறுக்குனியே அந்தப் பொண்ணா நீ? சும்மா குத்தி குத்தி விளையாடுறாங்க.. இப்படியே சொல்லிட்டு இருந்தா நா இன்ஃபுளுயன்ஸ் செய்ய ஆரம்பிச்சுடுவேன். நான்லாம் செமயா இன்ஃபுளுயன்ஸ் செய்வேன் என மிரட்டினார் பிரியங்கா.

விளாசும் நெட்டிசன்ஸ்
மேலும், இங்கு நம்மள மாதிரி ஆரோக்கியமான போட்டியாளர்களே கிடையாது என்றும் மார்தட்டி கொண்டார் பிரியங்கா. இதனை பார்த்த நெட்டிசன்கள், அக்ஷரா கூறியதை பாவனி மற்றும் பிரியங்காவிடன் அப்படியே கூற வேண்டுமா என கேட்டு அபினய்யை விளாசி வருகின்றனர். மேலும் இந்த வாரம் உங்களைதான் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











