பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக உனக்கு என்ன தகுதி இருக்கு? தாமரையை டார்கெட் செய்து விரட்டிய பிரியங்கா!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை எனக்கூறி முதல் ரவுண்டிலேயே தாமரை செல்வியை விரட்டிவிட்டார் பிரியங்கா.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் நடைபெற்றது.
பருத்தி வீரன் என்ற தலைப்பில் கார்டன் ஏரியாவில் கொட்டப்பட்டிருந்த பஞ்சை பிளாஸ்டிக் டப்பாவில் சேகரிக்க வேண்டும். போட்டியாளர்கள் சேகரிக்கும் பஞ்சு எடை மிஷில் எடை போடப்படும்.

ரிஜெக்ட்டட் என ஸ்டாம்பிங்
இதில் குறைவான அளவு பஞ்சை சேகரித்து கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களில் ஒருவரை வீட்டின் கேப்டனாக தகுதியில்லை என சரியான காரணத்தை கூறி சக ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்ற வேண்டும். இதில் எந்த போட்டியாளருக்கு தகுதி இல்லை என சக ஹவுஸ்மேட்ஸ் கூறுகின்றனரோ, அவரது கையில் ரிஜெக்ட்டட் என ஸ்டாம்பிங் செய்ய வேண்டும்.

தாமரைக்கு ஆதரவு
அந்த போட்டியாளர் கேப்டன் டாஸ்க்கில் இருந்து வெளியேற வேண்டும். அதன்படி முதல் ரவுண்டில் அபினய் மற்றும் தாமரை குறைவான பஞ்சை எடுத்து நாமினேஷனுக்கு வந்தனர்.
இதில் அபிஷேக் ராஜா, நிரூப், சிபி , ஐக்கி பெர்ரி ஆகியோர் தாமரைக்கு சப்போர்ட் செய்தனர்.

என்ன தகுதி இருக்கு?
பிரியங்கா, பாவனி ஆகியோர் அபினய் கேப்டன் ஆக வேண்டும் என்று கூறினர். அப்போது பேசிய பிரியங்கா, கேப்டன் ஆக உனக்கு என்ன தகுதி இருக்கு? என கேட்டு தாமரையை ரிஜெக்ட் செய்தார். என்ன தகுதியில்லை என்று கேட்டு தாமரை கேட்க, நீங்க சில பிரச்சனையில் இருக்கிறீர்கள், அதனால் இப்போது பிக்பஸ் வீட்டில் இருக்க வேண்டிய தேவையில்லை என மட்டம் தட்டி பேசினார்.

தாமரையை மார்கெட் செய்த பிரியங்கா
மேலும் நீ கேப்டன் ஆனால் என்ன செய்வாய் என்று கேட்டு தாமரையின் வாயை அடைக்கப் பார்த்தார் பிரியங்கா. அதற்கு நீங்கள் என்ன செய்துவிட்டு கேப்டன் ஆனீர்கள் என்று தாமரை பதிலுக்கு கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தாமரையை ரிஜெக்ட் செய்தால்தான் போட்டியில் பங்கேற்பேன் என தனியாக போய் அமர்ந்தார் பிரியங்கா.

ரிஜெக்ட் செய்யப்பட்ட தாமரை
மற்ற போட்டியாளர்கள் ஏன் தாமரை ஆகக்கூடாது என கேட்ட போதும் சப்பை காரணங்களை கூறினார் பிரியங்கா. இதனால் பொறுமை இழந்த நிரூப் போட்டியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதற்காக தாமரை கையில் ரிஜெக்ட்டட் முத்திரை குத்தினார். இதனால் கேப்டன் டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டார் தாமரை.

தாமரையை டார்கெட் செய்த பிரியங்கா
பின்னர் டைனிங் ஏரியாவிலும் அதே பிரச்சனையை தொடர்ந்த பிரியங்கா, உன்னுடைய மெண்டல் ஸ்டேட்டில் நீ இப்போதைக்கு கேப்டன் ஆகக் கூடாது என்றும் உனக்கு அதற்கான தகுதி இல்லை என்றும் மீண்டும் மீண்டும் கூறினார். அதோடு பாவனி மற்றும் இசைவாணி ஆகியோருக்கு ஆதரவாக காட்டி கொள்வதற்காக தாமரை செல்வி டார்கெட் செய்து பேசினார் பிரியங்கா.


Click it and Unblock the Notifications











