பாவனிய லவ் பண்றீங்களா? அபினய்யிடம் பளீச்சென கேட்ட ராஜு... மயான அமைதியான பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட்டாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.
டான்ஸ் மாஸ்டர் அமீர் இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் நேற்று சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்
வந்த வேகத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் எப்படி என ரிவ்வியூ கொடுத்தார் நடிகர் சஞ்சீவ். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ட்ரூத் ஆர் டேர் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு டைனிங் ஏரியாவில் அமர்ந்துள்ள போட்டியாளர்கள் பாட்டிலை சுற்றி விளையாடுகின்றனர்.

தடாலடியாக பேசிய அக்ஷரா
இதில் முதலில் சிபி பாட்டிலை சுழற்ற அது அக்ஷராவின் பக்கம் பார்க்கிறது. இதனை தொடர்ந்து டேர் என கூறும் அக்ஷராவுக்கு இரண்டு அழுக்கு துணிகளை துவைத்துவிட்டு வருமாறு டாஸ்க் கொடுக்கிறார் சிபி. அதற்கு முடியாது என்று தடாலடியாக கூறுகிறார். அடுத்தப்படியாக பாட்டிலை சுழற்றுகிறார் ராஜு.

பாவனிய லவ் பண்றீங்களா?
அப்போது பாட்டில் அபினய் பக்கம் பார்க்கிறது. இதையடுத்து ட்ரூத் என்று கூறுகிறார் அபினய். இதைத் தொடர்ந்து பாவனிய லவ் பண்றீங்களா என்று பளீச்சென கேட்கிறார் ராஜு. இதனை சற்றும் எதிர்பாராதா அபினய் என்னடா கேட்குறீங்க என்று அதிருப்தியாகிறார்.

அபினய்யின் பதிலை எதிர்பார்த்து
அதற்கு இல்லையா என பதில் கேள்வி கேட்கிறார் ராஜு. இதனால் பிக்பாஸ் வீடு மயான அமைதியாகிறது. பாவனி உட்பட அனைத்து போட்டியாளர்களும் அபினய்யின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அபினய்யிடம், என் மீது ஏதாவது ஃபீலிங்ஸ் இருக்கிறதா என்று கேட்டார்.

ரசிகள் அப்செட்
அதற்கு அபினய் அப்படியெல்லாம் இல்லை என்றார். இந்நிலையில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவான அபினய்யிடம் கொஞ்சம் கூட முதிர்ச்சியில்லாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டு அவரை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளார் ராஜு. ராஜுவின் இந்த கேள்வியால் நெட்டிசன்களும் சற்று அப்செட் ஆகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











