twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்ரூத் அன்ட் டேர் டாஸ்க்கில் ஏழரையை கூட்டிய ராஜு... தேவையில்லாத கேள்வியால் டோட்டல் டேமேஜ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ட்ரூத் அன்ட் டேர் டாஸ்க்கில் தேவையில்லாத கேள்வியை கேட்டு மொத்தமாய் டேமேஜ் செய்து கொண்டார் ராஜு.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறார். பெரும்பாலும் யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்துடன் விளையாடி வருகிறார்.

    மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்! மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்!

    ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ராஜுவுக்கும் பாவனிக்கும் செட் ஆகவில்லை. இருவருக்கும் இடையில் வாரா வாரம் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்த வண்ணம் உள்ளது.

    ட்ரூத் அல்லது டேர்

    ட்ரூத் அல்லது டேர்

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் ட்ரூத் அல்லது டேர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு டைனிங் ஏரியாவில் அமர்ந்துள்ள போட்டியாளர்கள் பாட்டிலை சுழற்றி விளையாடினர். இதில் போட்டியாளர்கள் பாட்டீலை வைத்து சுழற்ற வேண்டும். இதில் பாட்டில் யாரை பார்த்து இருக்கிறதோ, அவரிடம் சுழற்றுபவர் கேள்வி கேட்க வேண்டும்.

    அழுக்கு துணிகளை துவை

    அழுக்கு துணிகளை துவை

    இதில் முதலில் சஞ்சீவ் பாட்டீலை சுழற்றுகிறார். அந்த பாட்டீல் வருணை நோக்கி இருக்க, அவரிடம் இந்த வீட்டில் யாரை பார்த்து காண்டு ஆகிறது என்று கேட்கிறார். அதற்கு வருண், நிரூப்தான் என பதில் கூறுகிறார். அடுத்து சிபி பாட்டிலை சுழற்ற அது அக்ஷராவின் பக்கம் பார்த்ததுது. இதனை தொடர்ந்து டேர் என கூறும் அக்ஷராவுக்கு இரண்டு அழுக்கு துணிகளை துவைத்துவிட்டு வருமாறு டாஸ்க் கொடுக்கிறார் சிபி. அதற்கு முடியாது என்று தடாலடியாக கூறினார்.

    பாவனிய லவ் பண்றீங்களா?

    பாவனிய லவ் பண்றீங்களா?

    அடுத்தப்படியாக பாட்டீலை சுழற்றினார் ராஜு. அப்போது பாட்டில் அபினய் பக்கம் நோக்கி இருந்தது. இதையடுத்து ட்ரூத் என்று கூறினார் அபினய். அப்போது என்னை பற்றி யாரிடம் எல்லாம் தவறாக பேசினாய் என்று கேட்டார். அதற்கு எனக்கு தோன்றியதைதான் பேசினேன். தவறாக எதுவும் பேசவில்லை என்றார். இதைத் தொடர்ந்து பாவனிய லவ் பண்றீங்களா என்று கேட்டார் ராஜு. இதனை சற்றும் எதிர்பாராதா அபினய் என்னடா கேட்குறீங்க என்று அதிர்ச்சியானார்.

    பச்சை முட்டையை குடி

    பச்சை முட்டையை குடி

    அதற்கு இல்லையா என பதில் கேள்வி கேட்டார் ராஜு. ராஜு கேட்ட கேள்வியால் பிக்பாஸ் வீடே அமைதி ஆனது. பாவனியின் முகமும் மாறியது. இல்லை என்று கூறி கேம்மை முடித்தார அபினய். அடுத்து நிரூப் பாட்டீலை சுழற்ற அது ராஜுவை பார்த்து நின்றது. அப்போது ட்ரூத்தா டேரா என நிரூப் கேட்க, டேர் என்றார் ராஜு. உடனே பச்சை முட்டையை குடி என்றார் நிரூப்.

    நீ வெளியே போ..

    நீ வெளியே போ..

    அதற்கு முடியாது, ட்ரூத்தே சொல்கிறேன் என்று கூறிய ராஜுவிடம் இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் 5 பேர் யார் என கேட்கிறார். அதற்கு எப்படி 5 பேரை சொல்வது என்று ராஜு கேட்க, 3 பேரை சொல் என்றார் நிரூப். அதற்கு நீ போ, அடுத்து அபினய் மற்றும் பாவனி என மூன்று பேரை கூறினார் ராஜு.

    ஒரு மணிநேரம் பேசக்கூடாது

    ஒரு மணிநேரம் பேசக்கூடாது

    அடுத்து பிரியங்கா பாட்டீலை சுழற்ற அது அபிஷேக் பக்கம் நோக்கி இருந்தது. அப்போது டேர் என்ற பதில் கூறிய அபிஷேக்கிடம், இந்த கேம் முடிந்த பிறகு ஒரு மணி நேரம் நீ என்னிடமும் நிரூப்பிடமும் பேசக்கூடாது என்றார் பிரியங்கா. அதற்கு ஓகே என்று கூறினார் அபிஷேக்.

    உனக்குதான் தகுதியில்லை

    உனக்குதான் தகுதியில்லை

    அடுத்து அபிஷேக் பாட்டீலை சுழற்ற அது நிரூப் பக்கம் பார்த்தது. அப்போது ட்ரூத் என்ற நிரூப்பிடம் இந்த வீட்டில் இருக்க தகுதியற்றவர் யார் என்று கேட்டார் அபிஷேக். அதற்கு நீதான் என அபிஷேக்கை கூறிய நிரூப், நீ வெளியே போயிட்டு ஹேப்பியாக இருந்துவிட்டு வந்திருக்கிறாய் என்று அவருக்கே ரிவிட்டாக்கி விட்டார்.

    யாரை கழுவி ஊற்றுகிறார்கள்?

    யாரை கழுவி ஊற்றுகிறார்கள்?

    அடுத்து பாட்டீலை சுழற்றினார் அமீர். அந்த பாட்டீல் வருண் பக்கம் பார்க்க, என்னிடம் உங்களுக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமா என்று கேட்டார். அதற்கு இங்கு உள்ளவர்களில் யாரை வெளியே அதிகமாக கழுவி ஊற்றுகிறார்கள் என்று கேட்டார் வருண். அதற்கு நிரூப்பைதான் என்றார் அமீர்.

    போட்டுடைத்த தாமரை

    போட்டுடைத்த தாமரை

    அடுத்து அக்ஷாரா பாட்டீலை சுழற்றினார். அந்த பாட்டீல் தாமரை பக்கம் பார்க்க, பிரியங்காவிடம் உங்களுக்கு பிடிக்காத 5 விஷயங்களை சொல்லுங்கள் என்றார். அதற்கு பிரியங்கா எனக்கு கேப்டன் ஆக தகுதி இல்லை என்று கூறியது மற்றும் ஐக்கி நிரூப்பிடம் பேசுவது உங்களுக்கு பிடிக்காது, அது எனக்கு பிடிக்காது என்று பப்ளிக்கில் போட்டுடைத்தார்.

    English summary
    Biggboss Tamil 5: Raju damaged his name in truth or dare task. He asked Abhinay is he in Love with Pavani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X