கல்யாணத்துக்கு வாங்குனது.. இனிமே யூஸ் பண்ண முடியாது.. ஃபீல் பண்ணிய ராஜு.. அமீர் ஷூல ஹார்ட்டின்!
சென்னை: தனது கல்யாணத்துக்கு வாங்கிய ஷூக்களை நாசம் செய்துவிட்டதாக ராஜு ஃபீல் பண்ணியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் வார்டனாக சிபி, ஆசியர்களாக ராஜு, அபிஷேக் மற்றும் அமீர் ஆகியோர் இருந்தனர்.
மற்ற அனைவரும் மாணவ மாணவிகளாக இருந்தனர். இந்த டாஸ்க்கில் ஆசிரியர்கள் ஸ்ட்ரிக்ட்டாகவும் மாணவர்கள் சேட்டை செய்பவர்களாகவும் இருந்தனர்.

ஷூக்களில் ஓவியம்
இதில் பல்வேறு சண்டைகளும் உணர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு ஆசிரியர்களான ராஜு மற்றும் அமீர் ஆகியோரின் ஷூக்களில் அபினய் நெயில் பாலிஷால் வரைந்து வைத்திருந்தார்.

ஷூவில் ஹார்ட்டின்
அதன்படி ராஜுவின் ஷூவில் கேள்விக் குறியை வரைந்து வைத்திருந்தார். ஷூக்குள்ளேயும் க்ரீம்களை கொட்டி நாசம் செய்து வைத்திருந்தனர். இதேபோல் அமீரின் ஷூவில் ஹார்ட்டின் வரைந்து வைத்திருந்தனர். இதனை பார்த்த அமீர் என்னை யார் இந்த வீட்டில் அந்தளவுக்கு லவ் பண்றது என கேட்டார்.

கல்யாணத்துக்கு வாங்கிய ஷூ
பிரியங்காவிடமும் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டார் அமீர். பின்னர் அபினய் மற்றும் பாவனி ஆகியோர் அவர்களின் ஷூவை களீன் செய்தனர். அப்போது தன்னுடைய கல்யாணத்துக்கு வாங்கிய ஷூ இது... இப்படி செய்து விட்டார்கள் இனிமேல் யூஸ் பண்ண முடியாது என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார் ராஜு.

பழி தீர்த்துக்கொள்ள
ஏற்கனவே வார்டனின் குச்சியை திருடியவர்கள் விசிலை திருடியவர்கள், பர்மனன்ட் மார்க்கரால் வரைந்தவர்கள் என சேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு பனீஷ் மென்ட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வகுப்பில் ஆசிரியர்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததால் பழி தீர்த்துக்கொள்ள சக ஹவுஸ்மேட்ஸ் இப்படி செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











