நாளுக்கு நாள் கூடும் கிரேஸ்... வேற லெவல் மிமிக்ரி.. அப்லாஸை அள்ளும் ராஜு.. பொறாமையில் அபிஷேக்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அசத்தலாக மிமிக்ரி செய்து அசத்தி விட்டார் ராஜு ஜெயமோகன்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் ராஜு.

மேலும் சில படங்களில் நடித்துள்ள ராஜு, விஜய் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே தனக்கு மிமிக்ரி தெரியும் என்று கூறிய ராஜு, அவருடைய குரு பாக்யராஜ் போல் மிமிக்ரி செய்து அசத்தினார்.

உணர்ச்சிவசப்படாமல்..

உணர்ச்சிவசப்படாமல்..

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பின்னரும் அவ்வப்போது மிமிக்ரி செய்து வருகிறார் ராஜு. மேலும் போட்டியாளர்களிடமும் அன்பாக பழகி வருகிறார். யார் என்ன பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் தனக்கு தோன்றியதை செய்து வருகிறார் ராஜு.

முத்து படத்தில் எங்க தாத்தா

முத்து படத்தில் எங்க தாத்தா

மேலும் அவ்வப்போது டைம்மிங்கில் ஏதாவது பேசி கலக்கலாக காமெடியும் செய்து வருகிறார். இந்த வாரம் ஹவுஸ் கீப்பிங் டீம்மில் உள்ள ராஜு, முத்து படத்தில் வாரி வாரி கொடுத்தவர் எங்க தாத்தாதான், என்னைப் போய் இப்படி கூட்ட வைத்து வீட்டிற்களே என நகைச்சுவையாக ஆதங்கப்பட்டார்.

கொஞ்சம் கூட நகரவில்லை

கொஞ்சம் கூட நகரவில்லை

அவர் பேசிய அந்த பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. இதேபோல் ராஜு எடுத்த காய்ன் எங்கே என பிரியங்கா அவ்வளவு பேசியபோதும் தன் நிலையில் இருந்து கொஞ்சமும் நகராமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்தார்.

மகிழ்வித்த ராஜு

மகிழ்வித்த ராஜு

இதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் பெட் ரூம்மில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க லிவ்விங் ஏரியாவில் மிமிக்ரி செய்து காட்டி சக போட்டியாளர்களை மகிழ்வித்து கொண்டிருந்தார் ராஜு.

Recommended Video

Katrukkenna Veli lead Surya சீரியலை விட்டு விலகுவதாக தகவல்
தத்ரூபமாக செய்து காட்டினார்

தத்ரூபமாக செய்து காட்டினார்

கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது எப்படி சத்தம் கேட்கும் என்று செய்து காட்டிய ராஜு, ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பில் எப்படி பேசுவார்கள் என்பதையும் தத்ரூபமாக செய்து காட்டினார். எக்கோ எஃபெக்ட்டுடன் அவர் பேசியது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

ராஜுவை விமர்சித்த அபிஷேக்

ராஜுவை விமர்சித்த அபிஷேக்

நடிகர்கள் ரஜினிகாந்த், எம்ஆர் ராதா மற்றும் எஸ்ஜே சூர்யா போன்றும் பேசி அசத்தினார் ராஜு. இதையெல்லாம் பெட் ரூம்மில் இருந்தப்படியே கவனித்த அபிஷேக், செய்ததையே செய்து கொண்டிருக்கிறான், எனக்கு ஒன்றும் அதில் புதிதாக தெரியவில்லை, நீ இன்னும் வளர வேண்டும் என்று ராஜுவிடம் கூறினேன் என்று பிரியங்காவிடம் தெரிவித்தார்.

நீ என்ன கலா மாஸ்டரா?

நீ என்ன கலா மாஸ்டரா?

இதனைக் கேட்ட பிரியங்கா, நீ என்ன ஜட்ஜா? மத்தவங்களை மோட்டிவேட் செய்ய, நீ என்ன கலா மாஸ்டரா? கிழி கிழின்னு கிழிச்சிட்டன்னு சொல்ல என்று அபிஷேக்கிடம் ஏறினார். மேலும் சிம்பு போல் நான் நடிக்க வரலிங்க என்று பேசி அவராக ஆகலாம் என்று பார்க்கிறாயா? என்று தான் ரொம்ப நேர்மையானவர் போல் காட்டிக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X