பத்திரப்படுத்திய பிறகுதான் தெரியுது.. இது அனபெல் பொம்மை... தாமரையை வாரிய ராஜு!

சென்னை: பொம்மை டாஸ்க்கில் தாமரையை அனபெல் பொம்மை என்று சைலன்ட்டாக வாரிவிட்டார் ராஜு.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பொம்மை டாஸ்க்கை கொடுத்து கொளுத்திப் போட்டுள்ளார் பிக்பாஸ். நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

மேலும் ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும் அடுத்தவர் நிர்ணயிக்கும்படியான விதிகளையும் வகுத்துள்ளார் பிக்பாஸ். இதனால் யார் முதுகில் யார் குத்துகிறார்கள் என்பதை காட்டுகிறார் பிக்பாஸ்.+

புதிய டாஸ்க்

புதிய டாஸ்க்

இதில் கேம்மை தாண்டியும் ஹவுஸ்மேட்டுகளிடம் உள்ள வெறுப்பும் கோபமும் அடிக்கடி வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹவுஸ்மேட்டுகளை லிவிங் ஏரியாவில் அமர வைத்த பிக்பாஸ், ஹவுஸ்மேட்டுகளின் பெயர் எழுதப்பட்ட பொம்மைகளை கொடுத்து எந்த பொம்மை சுய புத்தியுடன் நடந்து கொள்கிறது என கூறுமாறு ஒரு டாஸ்க் கொடுத்தார்.

நான் மட்டும் தான் பிடிக்கிறேன்

நான் மட்டும் தான் பிடிக்கிறேன்

இதில் முதலில் பேசிய அண்ணாச்சி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் பேசினார். அடுத்து வந்த ராஜு, அண்ணாச்சி பொம்மையை எடுத்து இந்த பொம்மையை நான் மட்டும்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன், மற்ற யாரும் பிடிக்கவில்லை. இந்த பொம்மை சுயபுத்தியுடன் விளையாடும் ஒரு பொம்மை என்றார்.

கைப்பாவையாக செயல்படும் பொம்மை

கைப்பாவையாக செயல்படும் பொம்மை

அடுத்து பாவனி என்ன பொம்மை, நல்ல பொம்மையா? பேய் பொம்மையா என்று இன்னமும் டவுட்டாக உள்ளது என்றார். பின்னர் மதுமிதா பொம்மையை எடுத்த ராஜு இந்த பொம்மை மற்றவர்களின் கைபாவையாக மட்டுமே செயல்படும் ஒரு பொம்மை என்றார்.

டீசன்ட்டான பொம்மை இல்லை

டீசன்ட்டான பொம்மை இல்லை

பின்னர் சிபி பொம்மையை எடுத்த ராஜு, இந்த பொம்மையை டீசன்ட்டான பொம்மை என்று நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை. பிரச்சனைன்னு வந்தா தோளில் இழுத்து போட்டுக்கொண்டு செல்லும் பொம்மை. நட்பின் காரணமாக பலரின் பேச்சுகளை கேட்டு செயல்படுகிறது என்றார்.

ஈரமான ஓரம்

ஈரமான ஓரம்


அடுத்து வருண் பொம்மையை எடுத்த ராஜு இந்த பொம்மை முரட்டு பொம்மை என்றும் கோபப்படும் பொம்மை என்றும் கூறினார். பின்னர் பிரியங்கா பொம்மையை எடுத்த ராஜு இந்த பொம்மை 100 சதவீத சுயபுத்தியுடன் விளையாடும் பொம்மை என்றார். மேலும் இந்த பொம்மைக்கு ஈரமான ஓரம் காரமான வீரம் என எல்லாம் உள்ளது. என்ன பண்றோம்னு தெரியாம பண்ற ஒரு பொம்மை என்றார்.

குழப்பும் பொம்மை

குழப்பும் பொம்மை

அடுத்தப்படியாக ஐக்கி பொம்மையை எடுத்த ராஜு இந்த பொம்மை மனிதர்கள் வாழும் இடத்தில் இருக்கக்கூடாத பொம்மை என கிண்டலாக கூறினார். மேலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் ஒரு பொம்மை என்றார். அடுத்து தாமரையின் பொம்மையை எடுத்த ராஜு சரமாரியாக வாரினார்.

பகடைக்காயாக பயன்படுத்தும் பொம்மை

பகடைக்காயாக பயன்படுத்தும் பொம்மை

இந்த பொம்மை பத்திரப்படுத்தப்பட வேண்டிய ஒரு பொம்மை என்ற அவர், பத்திரப்படுத்திய பிறகுதான் தெரிந்தது அது அனபெல் பொம்மை என்று மற்றவர்களை பகடைக்காயாக பயன்படுத்தும் பொம்மை, தனக்கு தெரியாமலே அந்த பொம்மை மாறிக் கொண்டிருக்கிறது என்று சந்து கேப்பில் வாங்கி விட்டார்.

ஒரு அறிவார்ந்த பொம்மை

ஒரு அறிவார்ந்த பொம்மை

அடுத்த அக்ஷரா பொம்மையை எடுத்த ராஜு இது சிறப்பான பொம்மை, ஸ்மார்ட்டான பொம்மை, ஸ்ரேட்டஜிக்கல் பொம்மை, யார் தோற்க வேண்டும் என்று தெரிந்த பொம்மை, சுயபுத்தியுடன் விளையாடும் ஒரு அறிவார்ந்த பொம்மை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X