கண்ணிவெடி தெரியுமா.. கண்ணி வெடி... வேலையை ஆரம்பித்த ராஜமாதா... வெளியானது பிக்பாஸ் இரண்டாவது புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கமல்.

தோழி உதவுகிறார்
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தப்படி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் தனது தோழி தனக்கு உதவ போவதாக கூறினார்.

நிறைய பேரை கெஸ் பண்ணீங்க
இதனை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது காட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேச தொடங்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், எல்லாரும் நிறைய பேரை கெஸ் பண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்கிறார்.

ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கீங்க
அதற்கு அபிஷேக் ராஜா உங்களையும் கெஸ் பண்ணினோம் என்கிறார். தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ் ரம்யா கிருஷ்ணனை பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்கின்றனர். அதற்கு ரம்யா கிருஷ்ணனும் நீங்களும் ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கீங்க என்கிறார்.

ஊறுகாய் பாட்டீல் என்ன ஆச்சு?
தொடர்ந்து பேசும் ரம்யா கிருஷ்ணன், கண்ணிவெடி தெரியுமா? கண்ணி வெடி என்று கேட்கிறார். மேலும் அண்ணாச்சி ஊறுகாய் பாட்டீல் என்ன ஆச்சு என தனது ஸ்டைலில் வேலையை தொடங்கியுள்ளார். இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க்கில் நடந்த பிரச்சனைகள் மற்றும் ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் என ஏகப்பட்ட கன்டென்ட் உள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு
இவை எல்லாவற்றையும் நடிகை ரம்யா கிருஷ்ணன் விளாசி தீர்ப்பாரா அல்லது பட்டும் படாமல் இருப்பாரா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











