பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் தொகுத்து வழங்கப்போவது இவர்தான்.. வெளியான அசத்தல் தகவல்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த நான்கு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

யார் தொகுத்து வழங்குவார்?

யார் தொகுத்து வழங்குவார்?

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

விஜய் சேதுபதி பெயர்

விஜய் சேதுபதி பெயர்

கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. அதேநேரத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகியோரின் பெயர்களும் அடிப்பட்டன. ஆனால் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற குழப்பம் இருந்து வந்தது.

கமல் வரும் வரை

கமல் வரும் வரை

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று திடீரென ஒரு தகவல் பரவியது. ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தற்காலிகமாக தொகுத்து வழங்கியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த அனுபவம் உள்ளதால் தமிழிலும் கமல் வரும் வரை அவர் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது.

புரமோ வெளியாகவில்லை

புரமோ வெளியாகவில்லை

இந்நிலையில் நடிகை ரம்யா கிலுருஷ்ணன்தான் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்று நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சனிக்கிழமைக்கான புரமோக்கள் பகல் 1 மணிக்குள் வெளியாகி விடும். ஆனால் இந்த வாரம் இதுவரை ஒரு புரமோ கூட வெளியாகவில்லை.

புரமோ வெளியானால் மட்டுமே

புரமோ வெளியானால் மட்டுமே

இதனை பார்த்த நெட்டிசன்கள், சர்ப்ரைஸாக இரவு 9.30 மணிக்குதான் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்று காட்டுவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். புரமோ வெளியானால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் யார் தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியாகும்.

பல்ஸை பதம் பார்க்கிறார்கள்

பல்ஸை பதம் பார்க்கிறார்கள்

ஆனால் அதிலும் ட்விஸ்ட் வைத்து வரும் விஜய் புரமோ வெளியிடாமல் ரசிகர்களின் பல்ஸை பதம் பார்த்து வருகிறது. விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிக்கான புரமோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் எங்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என கொதித்து வருகின்றனர்.

புரமோ போடாம சோதிக்கிறீங்க

புரமோ போடாம சோதிக்கிறீங்க

அந்த வகையில் இந்த நெட்டிசன், எப்பா டேய்... ஒரு 30 செகண்ட் புரமோ... அதுல 20 செகண்ட்டுக்கு ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் ரம்யா மேம் பார்த்து வெறி பிடிச்சா மாதிரி கத்திறது, கூடவே படையப்பா பிஜிஎம் இதுக்கு எவ்ளோ நேரம் ஆக போகுது...ஏன்யா இன்னும் புரமோ போடாம சோதிக்கிறீங்க... என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X