லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிபியை வறுத்தெடுத்த ரம்யா கிருஷ்ணன்... கொஞ்சம் பார்ஷியலாதான் இருந்துச்சு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் குறித்து விவாதித்த ரம்யா கிருஷ்ணன் சிபியை வறுத்தெடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார இறுதி எபிசோடுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகின்றார்.

நிரூப்பின் முடி

நிரூப்பின் முடி

முதல் நாள் எபிசோட் என்பதால் போட்டியாளர்கள் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அக்ஷராவை மெழுகு டால் நீ என்று பாடி வர்ணித்த ரம்யா கிருஷ்ணன் அவருக்கு ஃபிளையிங் கிஸ் எல்லாம் கொடுத்தார். நிரூப்பின் முடி குறித்தும் புகழ்ந்து பேசினார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

வார்டனாக சிபி எப்படி?

வார்டனாக சிபி எப்படி?

இதேபோல் தாமரை, பிரியங்கா, பாவனி, ஐக்கி என பெண் போட்டியாளர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் குறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், வார்டனாக சிபி எப்படி நடந்து கொண்டார் என்று சக ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார்.

உங்களுக்கே திணறுதுல்ல..

உங்களுக்கே திணறுதுல்ல..

அப்போது பிரியங்கா, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபினய் என பலரும் சிபி ரொம்பவே கடுமையாக நடந்து கொண்டதாக கூறினர். தொடர்ந்து ராஜுவிடம் சென்ற ரம்யா கிருஷ்ணன் அவரை ஐந்து திருக்குறள்களையும் கூறுமாறு கேட்டார். ராஜு திக்கி திணறி கூறுவதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் உங்களுக்கே திணறுதுல்ல என்றார்.

எப்படி நடந்து கொண்டீர்கள்?

எப்படி நடந்து கொண்டீர்கள்?

மேலும் உங்களுக்கே திணறும் போது பாஷை தெரியாத ஒருவருக்கு எப்படி தெரியும் என்றும் அக்ஷராவுக்கு ஆதரவாக பேசினார். பின்னர் சிபியிடம் சென்ற ரம்யா கிருஷ்ணன், நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டு வறுக்க தொடங்கினார். அப்போது சிபி தனது கதாப்பாத்திரம் குறித்து விளக்கினார்.

எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்

எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்

அப்போது ராஜமாதா சிவகாமி தேவி ஸ்டைலில் சேட்டை செய்ய விடவில்லையா அல்லது எதையும் செய்ய விடவில்லையா என கேட்டார். இதனைக் கேட்ட சிபி எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை தான் நான் செய்தேன் என்றார். மேலும் பிரியங்காவிடமும் உங்களுக்கு தோன்றியதை நீங்கள் செய்யுங்கள் எனக்கு கொடுக்கப்பட்டதை நான் செய்கிறேன் என்றேன் என ரம்யா கிருஷ்ணனிடம் தெளிவுப்படுத்தினார் சிபி.

உங்களிடம் பர்மிஷன் கேட்கவில்லை

உங்களிடம் பர்மிஷன் கேட்கவில்லை

ஆனால் சிபி செய்தது தவறு என்பதை போல் பேசிய ரம்யா கிருஷ்ணன், நீங்கள் சொன்னதை நாங்கள் பார்க்கவே இல்லை என்றார். மொத்தத்தில் ரம்யா கிருஷ்ணன் வார்டனாக இருந்த சிபியையும் வாத்தியாராக இருந்த ராஜுவையும் வறுத்தெடுத்தார். இதுதொடர்பாக குறும்படம் போடலாமா என்று ரம்யா கிருஷ்ணன் கேட்கவும், போடுவது என்றால் போடுங்கள் என்றார் சிபி. அதற்கு உங்களிடம் பர்மிஷன் கேட்கவில்லை என தடாலடியாக சிபியின் வாயை அடைத்தார் ரம்யா கிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X