பிக்பாஸிலிருந்து அபிஷேக்கை தூக்கியதற்கான காரணம் இதுதானா? அடிமடியிலேயே கைவச்சா.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜாவை கட்டம் கட்டி வெளியேற்றியதற்கான காரணம் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி விஜய் டியில் தொடங்கியது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எந்த நாமினேஷனும் நடைபெறவில்லை. இருப்பினும் திருநங்கையான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

நாடியா சங் வெளியேற்றம்

நாடியா சங் வெளியேற்றம்

அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் எவிக்ஷனாக மலேசிய மாடல் அழகியான நாடியா சங் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது எவிக்ஷனாக அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார்.

இன்ஃபுளுயன்ஸ் செய்த அபிஷேக்

இன்ஃபுளுயன்ஸ் செய்த அபிஷேக்

யூட்யூபரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்தே மற்ற போட்டியாளர்களை விளையாட விடாமல் தன்னுடைய கருத்துக்களை அவர்கள் மீது திணித்து விளையாட வைத்து வந்தார். எல்லா போட்டியாளர்களையும் இன்ஃபுளுயன்ஸ் செய்து வந்தார்.

இதான் என் ஸ்டைல்

இதான் என் ஸ்டைல்

இதனை சக ஹவுஸ் மேட்டுகள் சுட்டிக்காட்டியும், இதுதான் என் ஸ்டைல், நான் இப்படிதான் என்று கூறி எரிச்சலாக்கினார். சில மூத்த போட்டியாளர்களின் வயதுக்கு கூட மரியாதைக் கொடுக்காமால் தரக்குறைவாக பேசி வந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை வெளியேற்றுங்கள் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

கதவை சாத்திய பிக்பாஸ்

கதவை சாத்திய பிக்பாஸ்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். காப்பாற்ற பயன்படும் பஞ்ச தந்திர காயினை கொடுத்து சக போட்டியாளர்கள் காப்பாற்ற முயன்றும், அந்த காயினை இப்போது பயன்படுத்த முடியாது என அதற்கும் தடை போட்டு, அபிஷேக் ராஜா வெளியேறியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பிக்பாஸ்.

மீண்டும் உறுதிப்படுத்திய கமல்

மீண்டும் உறுதிப்படுத்திய கமல்

அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை எபிசோடிலும் அபிஷேக் ராஜாவை வச்சு செய்தார் கமல் ஹாசன். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இதற்கு முன்பு பார்த்துள்ளீர்களா என்று கேட்டு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டார் கமல்.

நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்று கூறுவதை நம்ப முடியவில்லை என அதற்கு ஆதாரமாக பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா பேசிய சில விஷயங்களை கூறினார்.

அபிஷேக்கின் விமர்சன வீடியோ

அபிஷேக்கின் விமர்சன வீடியோ

நேற்றைய எபிசோடிலும், நான் உங்களை கேட்கவில்லை, நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என நோஸ்கட் கொடுத்தார் கமல். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் விமர்சித்து அபிஷேக் ராஜா பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் கமலின் டிவிட்டர் ஹேண்டிலுக்கும் டேக் செய்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை

இது ஒரு புறம் இருக்க, கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதற்கு முன்பு பார்த்துள்ளீர்களா என கமல் ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்டார். அதற்கு பதில் கூறிய அபிஷேக் ராஜா, நான் பார்த்ததே இல்லை. நீங்கள் தொகுத்து வழங்கியதால் தான் நான் பார்க்கவில்லை. உங்களை பற்றிய சினிமா தேடல் இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

கடந்த வாரமே ஸ்கெட்ச் போட்டாகிவிட்டது

கடந்த வாரமே ஸ்கெட்ச் போட்டாகிவிட்டது

இதனைக் கேட்ட கமல், ஒரு நல்ல நிகழ்ச்சியை ஒரு நல்ல கலைஞன் பார்க்க நான் தடையாய் இருந்து விட்டேனா என பதில் கூறினார். ஆனால் நேற்று முன்தினம் எபிசோடில் உங்களுக்காக வீக்கெண்ட் எபிசோடுகள் மட்டும் பார்ப்பேன் என்று மாற்றி மாற்றி பேசினார். இதனால் கடந்த வாரமே அபிஷேக் ராஜாவை வெளியேற்ற ஸ்கெட்ச் போட்டுவிட்டதாம் பிக்பாஸ் டீம்.

பிக்பாஸிடமே கோபப்பட்ட அபிஷேக்

பிக்பாஸிடமே கோபப்பட்ட அபிஷேக்

போதா குறைக்கு பஞ்ச தந்திர டாஸ்க்கின் போது சக போட்டியாளர் மீது கோபமான அபிஷேக் ராஜா, ஏன்டா குழந்தைகளை எல்லாம் வேலைக்கு எடுக்குறீங்க என பிக்பாஸ் மீதே கோபப்பட்டார். இதுவும் ஒரு காரணம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட என கூறி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X