பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய்யின் நண்பர்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆவார். அவர்களில் திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதுவரை 4 பேர் வெளியேற்றம்

இதுவரை 4 பேர் வெளியேற்றம்

அவரை தொடர்ந்து எவிக்ஷன் புராசஸ் அடிப்படையில் நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி என நான்கு போட்டியாளர்கள் வெளியாகியுள்ளனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

அவர்களில் இந்த வாரம் இமான் அண்ணாச்சிதான் இந்த வாரம் வெளியேறுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது.

பிக்பாஸ் வைல்டு கார்டு

பிக்பாஸ் வைல்டு கார்டு

அதன்படி நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளதாக கூறப்பட்டது. பிறகு தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாவார் என்றும் கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய யூட்யூபர் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என்றும் தகவல் வெளியானது.

விஜய்யின் நெருங்கிய நண்பர்

விஜய்யின் நெருங்கிய நண்பர்

இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபல நடிகர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் சஞ்சீவ்

மாஸ்டர் படத்தில் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். இதேபோல் படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் சஞ்சீவ்.

எந்த சஞ்சீவ்?

எந்த சஞ்சீவ்?


நடிகர் சஞ்சீர் நடிகை வனிதா விஜயகுமாரின் சித்தி மகன் ஆவார். இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிலர் ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவ்வா அல்லது விஜய்யின் நண்பரான நடிகர் சஞ்சீவ்வா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரும் நாட்களில் தெரியும்

வரும் நாட்களில் தெரியும்

ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கிறாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X