கேப்டன் ஆனதுமே வேலையைக் காட்டிய பாவனி.. அக்ஷராவுடன் மல்லுக்கட்டு.. பகீர் கிளப்பும் பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் நடைபெற்றது காட்டப்பட்டது. அதன்படி நடைபெற்ற மியூஸிக் சேர் டாஸ்க்கில் அமீர் கேப்டன் ஆனார்.
ஆனால் பாவனி ரெட்டி தான் வைத்திருந்த காயினை பயன்படுத்தி அமீரின் கேப்டன் பதவியை தட்டிப்பறித்தார். அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதலே பாவனியுடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

தட்டிப் பறித்த பாவனி
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அமீரின் கேப்டன் பதவியை பாவனி தட்டிப் பறித்ததால் அமீரின் முகமே மாறிவிட்டது. இதனால் அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கத்தில் இனி புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாவனி - அக்ஷரா மோதல்
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் கேப்டன் ஆன பவானிக்கும் அக்ஷராவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி காயின் மூலம் எளிதாக கேப்டனான பாவனிக்கு பிக்பாஸ் பெனால்ட்டியாக பெண் போட்டியாளர்கள் கேட்கும் உதவியை செய்ய வேண்டும் என தெரிகிறது.

மூன்று பெண்களுக்கு உதவி
இதனை தொடர்ந்து கிட்சன் ஏரியாவில் அக்ஷரா பாவனியிடம் ஏதையோ கேட்க, உடனே பாவனி உங்களுக்கு காபி வேண்டுமா, டீ வேண்டுமா? உங்க பெட்டை க்ளீன் பண்ணணுமா என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார். இதனைக் கேட்ட அக்ஷரா, மூன்று பெண்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம். பர்சனல் ஹெல்ப் என்று அவர்கள் சொல்லவில்லை.

என் தலையில் கட்டி விடுவீர்களே..
ஆகையால் நாங்கள் என்ன உதவி கேட்டாலும் பண்ணிதான் ஆகவேண்டும். அதுதான் உங்களுக்கு கொடுத்துள்ள பெனால்ட்டி என்கிறார். இதனைக் கேட்ட பாவனி, அப்படி பார்த்தால் உங்களுடைய முழு வேலையையும் நீங்கள் என் தலையில் கட்டி விடுவீர்களே என்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இன்னும் அதிகரிக்கும்
ஏற்கனவே பாவனிக்கும் அக்ஷராவுக்கும் அந்த வீட்டில் ஆரம்பம் முதலே ஆகாமல் இருந்து வருகிறது. காயின் ஆளுமை கொடுத்தப்போதே அக்ஷராவை வச்சு செய்தார் பாவனி. தற்போது பாவனி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆகியுள்ளதால் அக்ஷராவுடனான மோதல் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











