ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... ராஜுவால் அப்செட் ஆகும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையை ஷேர் செய்துக்கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் இசைவாணி கண்ணீர் விட்டு அழுவதையும் அவரது சோகக் கதையையும் கேட்ட சக ஹவுஸ்மேட்டுகளும் கண் கலங்கினர்.

கஷ்டத்தை வெளியில் காட்டக் கூடாது
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் பேசியதை வைத்து அவர்களுக்கு இம்ப்ரஷன்ஸ் கொடுக்கப்படுவதாக தெரிகிறது. இதில் பேசும் நடிகர் ராஜு, கலைஞர்கள் நம் கஷ்டத்தை வெளியில் காட்டக் கூடாது.

மக்கள் சிரிக்க வேண்டும்
ஒரு கலைஞனை முன்னால் பார்த்தால் மக்கள் சிரிக்க வேண்டும். நம் கஷ்டத்தை சொல்லியாக வேண்டும் என்ற ஸ்டேஜ்தான் இது.. இருந்தாலும் உங்க பாட்டுல இருக்க லைஃப் இருக்குல்ல.. அது கதை இல்ல.. எல்லாரும் சூப்பர் சூப்பர்னு கை கொடுத்தா நாம வளர மாட்டோம்.

தம்ஸ் டவுன் இம்ப்ரஷன்
நடந்து போகும் வழியில் ஏதாவது ஒரு சுவர் இருந்தா தான் அதை உடைக்கணும்னு நினைப்போம். நான் இன்னைக்கு உங்களுக்கு அந்த சுவர்.. என்று கூறி கூறி தம்ஸ் டவுன் இம்ப்ரஷனை போர்டில் வைக்கிறார். இந்தக் காட்சியில் இசைவாணி ஒரு பக்கம் அழுது கொண்டிருக்கிறார்.

கொளுத்தி போட்ட பிக்பாஸ்
ஒரு பக்கம் சின்னப்பொண்ணின் முகம் மாறுகிறது. மற்றொரு போட்டியாளர் சின்னப்பொண்ணுவிடம் கோபமா என்ற கேட்கிறார். அதற்கு அதெல்லாம் இல்லை என சமாளிக்கிறார் சின்னப்பொண்ணு. இரண்டாவது புரமோவின் மூலம் வீட்டுக்குள் கொளுத்திப் போட்டுள்ளார் பிக்பாஸ்.
Recommended Video

விரிசலை உண்டாக்கப் போகிறதா?
இது இப்படியே இருக்கப் போகிறதா... அல்லது இதனால் ஏற்படும் மனக்கசப்பு அப்படியே நீடித்து ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே விரிசலை உண்டாக்கப் போகிறதா என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும். முதல் புரமோவை பார்த்ததுமே ரசிகர்கள் இதுபோன்று ஏதாவது நடக்கும், கடந்து சீசனில் பிக்பாஸ் அப்படிதான் ஆரம்பித்து விட்டார் என கூறி வந்தனர்.

பிரச்சனை வெடிக்கும்
அதே போல் தற்போது அழுகாச்சி டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என தெரிகிறது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











