பிக்பாஸுக்கு 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட்.. அப்போ இந்த வாரம் அவர்தானா.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் ஒருவர் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் பெரும்பாலும் புதிய முகங்களே பங்கேற்றுள்ளனர்.

10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் திருநங்கை நமீதா மாரிமுத்து தானாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

முதல் எவிக்ஷன்

முதல் எவிக்ஷன்


அவரை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக நாடியா சங் வெளியேற்றப்பட்டார். மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நபராக எவிக்ட்டானார். அவரை தொடர்ந்து யூட்யூப் விமர்சகரான அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார்.

நான்காவது எவிக்ஷன்

நான்காவது எவிக்ஷன்

மூன்றவாது எவிக்ஷனாக சின்னப்பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக கடந்த வாரம் ஸ்ருதி வெளியேற்றப்பட்டார். நன்றாக விளையாடிய போட்டியாளரான ஸ்ருதி வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

7 பேர் நாமினேட்டட்

7 பேர் நாமினேட்டட்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா என 7 பேர் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

அதிர்ச்சி வைத்தியம்

அதிர்ச்சி வைத்தியம்

இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அபினய் முதல் வாரம் முதலே நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்து வருகிறார். கடந்த வாரம் ஸ்ருதியா அபினய்யா என கடைசி நிமிடம் வரை பரபரப்பு இருந்தது. அபினய் தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ருதியை வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பிக்பாஸ்.

யார் வெளியேறுவார்?

யார் வெளியேறுவார்?

ஆனால் இந்த வாரம் அபினய், மதுமிதா மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோரும் லிஸ்ட்டில் உள்ளதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று யூகிக்க முடியாத அளவில் குழப்பம் இருந்து வந்தது. பெரும்பாலான நெட்டிசன்கள் மதுமிதா அல்லது இமான் அண்ணாச்சி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.

40 நாட்கள் ஒப்பந்தம்

40 நாட்கள் ஒப்பந்தம்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இமான் அண்ணாச்சி 40 நாட்கள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் இதனால் இந்த வாரம் அவர் வெளியேறவே வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் யார் வெளியேறப் போகிறார் என்பது ஞாயிற்றுக் கிழமைதான் அதிகாரப்பூர்வமாக தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X