க்ளாரிட்டி கொடுங்க... பிக்பாஸிடம் கேட்ட ஸ்ருதி.. அடங்காத பாவனி.. நேற்றும் அதே பேச்சுதான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தாமரை செல்வியின் காயினை எடுத்தது குறித்து க்ளாரிட்டி கொடுக்கும்படி பிக்பாஸிடம் மீண்டும் கேட்டார் ஸ்ருதி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் தாமரை செல்வி உடை மாற்றியப்போது, அந்த அறைக்குள் சென்ற ஸ்ருதி, அவரது காற்று காயினை திருடினார்.

ஸ்ருதி காயினை திருட உடந்தையாக இருந்தார் பாவனி. இதற்காக அவர் உடை மாற்றும் போது அந்த அறைக்குள் உள்ளே சென்ற பாவனி டவலை வைத்து தாமரை பார்க்க முடியாதப்படி மறைத்துக் கொண்டார்.

விளையாட்டே தேவையில்லை

விளையாட்டே தேவையில்லை

இதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்ருதி தாமரையின் காயினை எடுத்துக்கொண்டார். இதனை கண்டுப்பிடித்த தாமரை நம்பி உடை மாற்றும் அறைக்குள் விட்டால் இப்படி துரோகம் செய்து விட்டீர்களே என கண்ணீர் விட்டார். இப்படி ஒரு விளையாட்டே தேவையில்லை, நான் வீட்டுக்கே போகிறேன் என்று அழுது தீர்த்தார்.

கொஞ்சம் கூட உணரவில்லை

கொஞ்சம் கூட உணரவில்லை

ஆனால் தான் செய்தது சரிதான் என மல்லுக்கு நின்றார் ஸ்ருதி. தான் செய்த தவறை கொஞ்சம் கூட உணரவில்லை. மாறாக தாமரை செல்வி பொய் சொல்வதாக கூறினார். இதனால் ரொம்பவே அப்செட் ஆனார் தாமரை. இந்நிலையில் நேற்றைய எபிசோடிலும் அந்த சம்பவத்தை பேசிக் கொண்டிருந்தனர் ஸ்ருதியும் பாவனியும்.

நிம்மதியா இருக்க முடியும்

நிம்மதியா இருக்க முடியும்

அப்போது ஸ்ருதி நாங்கள் செய்தது சரியா என க்ளாரிட்டி கொடுங்கள் என்று பிக்பாஸிடம் கேட்டார். அப்போது பேசிய பாவனி, தப்பா சரியா என்று சொன்னால்தான் நிம்மதியா இருக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசிய ஸ்ருதி, எங்க ஸ்டாண்டுல நாங்க சரியா இருக்கோம் என்றார்.

யாருடனும் டிஸ்கஸ் செய்யாதே

யாருடனும் டிஸ்கஸ் செய்யாதே

திருப்பிக் கொடுத்தாலும் பிளேம் என் மீதுதான் வரும் என்றும் கூறினார் ஸ்ருதி. அப்போது பேசிய பாவனி , நான் அவருடன் பிரச்சனையை பேசி தீர்த்தது வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக தான். இல்லாவிட்டால் வேலை பார்க்க முடியாது. நீயும் யாருடனும் டிஸ்கஸ் செய்யாதே, அபினய் பேசிய போது கூட அதைப்பற்றி பேசாதே என்று கூறிவிட்டேன் என்றார் பாவனி.

கமல் சார் சொல்லட்டும்

கமல் சார் சொல்லட்டும்

மேலும் க்ளாரிட்டி வந்த பிறகு அதுகுறித்து முடிவு பண்ணலாம் என்றும் கூறினார் பாவனி. மற்றொரு இடத்திலும் அது குறித்து பேசினார் பாவனி. அப்போது எனக்கு அந்த காயினை தூக்கி அவரிடமே கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. அவரசப்பட வேண்டாம். சனிக்கிழமை கமல் சார் பேசியதும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குள்ளேயே ஒரு முடிவு செய்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X