நீங்க மூடிக்கிட்டு உங்க வேலைய பாருங்க... அபிஷேக்கை அசிங்கப்படுத்திய ஸ்ருதி... தெறிக்க விடும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜாவை, சக போட்டியாளரான ஸ்ருதி வெளுத்துவிட்ட வீடியோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான போட்டியாளர்கள் புது முகங்களாகவே உள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்கி 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஒவ்வொருவரின் ஒரிஜினாலிட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளது.

நடத்தையில் மாற்றம்

நடத்தையில் மாற்றம்

போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களை மறந்து தங்களின் சுயரூபத்தை காட்டி வருகின்றனர். அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு பல போட்டியாளர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரியங்கா போன்ற சில போட்டியாளர்கள் தங்களின் பெயரை கெடுத்துக் கொண்டுதான் வெளியே வருவார்கள் என்று சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இன்ஃபுளுயன்ஸ் செய்யும் அபிஷேக்

இன்ஃபுளுயன்ஸ் செய்யும் அபிஷேக்

அந்த வகையில் சமூக வலைதளங்களில் அதிகம் டேமேஜ்ஜானவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிஷேக் ராஜா. யூட்யூப் விமர்சகரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நாள் முதலே சமூக வலைதளங்களில் வறுபட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தன் சொல்படிதான் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரையும் இன்ஃபுளுயன்ஸ் செய்து வருகிறார் அபிஷேக் ராஜா.

அபிஷேக்கிற்கு தக்க பதிலடி

அபிஷேக்கிற்கு தக்க பதிலடி

அதான் நீ ஆனால் அது உனக்கு தெரியாது, நான் சொல்வது போல் விளையாடு, நான் உனக்காகதான் விளையாடுகிறேன் அது ஏன் உனக்கு புரியவில்லை என்பது போன்ற வசனங்களை பேசி போட்டியாளர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பாக்கிறார். இதனை சில போட்டியாளர்கள் புரிந்து கொண்டு அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எதிர்க்கும் போட்டியாளர்கள்

எதிர்க்கும் போட்டியாளர்கள்

சில போட்டியாளர்கள் அபிஷேக்கின் மகுடிக்கு ஆடும் பாம்பாகிவிட்டனர். பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜாவை எதிர்க்கும் சில போட்டியாளர்களாக இமான் அண்ணாச்சி, ராஜு ஜெயமோகன், அக்ஷரா மற்றும் ஸ்ருதி ஆகியோர் உள்ளனர். ராஜு பட்டும் படாமல் நழுவி வருகிறார். ஆனால் இமான் அண்ணாச்சி, அக்ஷரா, ஸ்ருதி ஆகியோர் நேருக்கு நேராக பேசி விளாசி வருகின்றனர்.

பிராண்டி விட்ட ஸ்ருதி

பிராண்டி விட்ட ஸ்ருதி

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் நெருப்பு காய்னுக்காக ஸ்ருதி மற்றும் இசைவாணியிடம் டீல் பேசினார் அபிஷேக் ராஜா. இதனை ஏற்றுக்கொள்ளாத ஸ்ருதி, நீங்க மத்தவங்கக்கிட்ட போய் டீல் பேசுங்க என பிராண்டி விட்டார். இந்நிலையில் ஸ்ருதி அபிஷேக் ராஜாவை பிக்பாஸ் வீட்டில் பங்கம் பண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்க மூடிக்கிட்டு உங்க வேலைய பாருங்க

நீங்க மூடிக்கிட்டு உங்க வேலைய பாருங்க

அதில் ஸ்ருதியை பிரைன் வாஷ் செய்யப் பார்க்கிறார் அபிஷேக் ராஜா. அதற்கு பதில் சொல்லும் ஸ்ருதி, நீங்க மூடிக்கிட்டு உங்க வேலைய பாருங்க என்கிறார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் அபிஷேக் கரெக்ட்.. கரெக்ட்.. என தான் அசிங்கப்பட்டதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கிறார்.

கொஞ்ச நாள் வச்சு செய்வோம்

கொஞ்ச நாள் வச்சு செய்வோம்

இந்த வீடியோவை கன்னாபின்னாவென ஷேர் செய்யும் நெட்டிசன்ஸ், இதைத்தான் நாங்கள் இவரு வெளியே இருக்கும்போதும் சொன்னோம் என்று கூறி வைரலாக்கி வருகின்றனர். இந்த வார நாமினேஷனில் உள்ள அபிஷேக் ராஜாவை எப்படியாவது வெளியேற்றிவிடுங்கள் என்று சிலரும், அவர்தான் கன்டென்ட், அவரை இன்னும் கொஞ்ச நாள் வச்சு செய்வோம் என்று சிலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X