ப்பா... என்னா ஆட்டம்... மொத்த பேரையும் இழுத்துப்போட்ட தாமரை... வேற மாரி.. வேற மாரி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு பாடலுக்கு தாமரை செல்வி ஆடிய நடனம் பார்வையாளர்களை வாவ் போட வைத்தது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஊரு விட்டு ஊரு வந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகள் நகரத்தினர் கிராமத்தினர் என இரண்டு குழுக்கலாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. இதனை முன்னிட்டு வேக் அப் பாடலாக கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ஊரு விட்டு ஊரு வந்து பாடல் ஒலிபரப்பப்பட்டது.

சின்னப்பொண்ணு பாட
இதனை தொடர்ந்து வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டின் பணிகள் ஆரம்பிக்க, கிராமத்தினர் குழு கார்டன் ஏரியாவில் பர்ஃபாமன்ஸை ஆரம்பித்தது. அப்போது சின்னப்பொண்ணு நாட்டுப்புற பாடலை பாட, தாமரை செல்வி, அக்ஷரா ரெட்டி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் நடனமாடினர்.

அசத்தல் டான்ஸ் ஆடிய தாமரை
பாடலுக்கு ஏற்ப மூன்று பேரும் தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்புகளை வைத்து நடனமாடினர். அவர்களில் தாமரை செல்வியின் ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மற்ற இரண்டு போட்டியாளர்கள் ஆடிய போதும், பார்வையாளர்களின் கண்கள் தாமரை செல்வியை விட்டு நகர வில்லை.

வேற மாரி வேற மாரி
அவரது ஆட்டத்தை பார்த்தத நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளிவிட்டனர். தாமரை செல்வியின் நடனத்தை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை ஸ்டெப்ஸ், ப்பா.. என்ன மாரி இருக்கு... வேற மாரி வேற மாரி.. அற்புதம்.. இறங்கி குத்துறாங்க என பதிவிட்டுள்ளார்.

பின்றீங்க தாமரை..
தாமரையின் டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை என்னம்மா டான்ஸெல்லாம் பின்றீங்க என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நாடகக் கலைஞர்
தாமரை செல்வி ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மேடை நாடகங்களில் கதாப்பாத்திரங்கள் நடிப்பதற்கு முன்பாக, நகைச்சுவையாக பேசி நடனமாடி வருகிறார். தனது முதல் கணவருடன் சென்றுள்ள தனது மகன் தன்னுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











