இங்கேயும் இப்படியா? கமல் முன்பே கன்னாபின்னாவென சண்டை போட்டுக்கொள்ளும் தாமரை - பாவனி.. பரபர புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் பார்வையாளர்களையும் ஹவுஸ்மேட்டுகளையும் அகம் டிவி வழியாக சந்திப்பது வாடிக்கை.

அப்போது அந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பார். அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இன்று ஹவுஸ் மேட்டுகளை சந்திக்கிறார்.

சலுகை ஏதும் இல்லை

சலுகை ஏதும் இல்லை

இதுதொடர்பாக இன்று வெளியான முதல் புரமோவில் பேசியுள்ள நடிகர் கமல் ஹாசன், பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள், அதன் மூலம் வெடிக்கும் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் இந்த வாரம் சலுகை ஏதும் இல்லை, எவிக்ஷன் உண்டு என்றார்.

சண்டை குறித்து விசாரித்த கமல்

சண்டை குறித்து விசாரித்த கமல்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல்ஹாசன், நேற்றைய எபிசோடில் பாவனிக்கும் தாமரை செல்விக்கும் இடையே நடந்த சண்டை குறித்து விசாரிக்கிறார். அப்போது பேசும் தாமரை செல்வி, இந்த பொண்ணு எப்போதும் என்னை மனசு நோகடிப்பது போல் பேசுகிறார், இதனால் கோபம் பயங்கரமாக வருகிறது என கூறுகிறார்.

உள்ளே ஒன்னு வச்சுக்கிட்டு

உள்ளே ஒன்னு வச்சுக்கிட்டு

அப்போது குறுக்கிடும் பாவனி, தாமரை செல்வி மனதில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டுதான் பேசுகிறார் என்று குற்றம்சாட்டுகிறார். மேலும் எனக்கு ஒரு டவுட் சார் என ஆரம்பிக்கும் பாவனி, இவங்களும் பட்டுபட்டுன்னுதான் பேசுறாங்க என்கிறார்.

எப்போ பேசினேன்?

எப்போ பேசினேன்?

இதனால் கடுப்பாகும் தாமரை செல்வி உங்களை பட்டு பட்டென்று பேசினேன் என வரிந்து கட்டுகிறார். அதற்கு சிரித்தப்படியே பட்டு பட்டுன்னு பேசமாட்டீங்களான என பதிலுக்கு கேள்வி கேட்கிறார் பாவனி ரெட்டி. அதற்கும் விடாத தாமரை செல்வி, எதில் பேசினேன், எதில் நியாயம் இல்லையோ அதில்தான் பேசுகிறேன் என்கிறார்.

கமல் எதிரிலேயே சண்டை

கமல் எதிரிலேயே சண்டை

கமல் இருப்பதையே மறந்து இருவரும் மாறி மாறி மல்லுக்கு நிற்கின்றனர். கமல் பேசுவதை கூட கவனிக்காமல் சண்டை போட்டு கொள்கின்றனர் தாமரை செல்வியும் பாவனியும். இதை பார்த்த கமல், ஹலோ.. ஹலோ என கடுப்பாகிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X