நல்லா சிண்டு முடிச்சுவிடுறீயே... பிரியங்காவை வெளுத்து வாங்கும் தாமரை... களைக்கட்டும் பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பிரியங்கா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னை எதிர்பவர்களை எல்லாம் கட்டம் கட்டி வருகிறார்.
குறிப்பாக அண்ணாச்சி, தாமரை செல்வி, அக்ஷரா ஆகிய மூன்று பேரையும் ஒரு வழியாக்கி வருகிறார். நேற்றைய எபிசோடில் இமான் அண்ணாச்சியை வேலை செய்யாமல் ஓபி அடிக்கிறார் என்றார். இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரும் பிரளயம் ஏற்பட்டது.

கேலி செய்த பிரியங்கா
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் பிரியங்காவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. வருணிடம் தாமரை பேசுவது போல் பேசி கேலி செய்தார் பிரியங்கா. இதனை பார்த்த தாமரை தனது டர்ன் வந்தப் போது அவரை வச்சு செய்தார்.

இரண்டாவது புரமோ
அதாவது, எப்போதும் தன் குரல் மட்டுமே உயர்ந்து இருக்க வேண்டும் மற்ற அனைவரும் தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரியங்கா என்ற தாமரை இதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன் என்றார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பின்னாடி இன்னொன்னு பேசுறாங்க
இரண்டாவது புரமோவிலும் பிரியங்காவும் தாமரை செல்வியும் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில் பேசும் பிரியங்கா, இந்த வீட்டில் சில பேர் ஒன்னு பண்றாங்க... அதுக்கப்புறம் பின்னாடி இன்னொன்னு பேசுறாங்க என்று கூறுகிறார்.

செமயா பண்ற நீ...
இதைத்தொடர்ந்து பேசும் தாமரை செல்வி, நீ சிண்டு முடிச்சு பேசுறதுலேயே குறியா இருக்க, செமயா பண்ற நீ... பயங்கரமா பண்ற நீ... நான் கூட என்னவோன்னு நினைச்சேன்.. என்று கூறியப்படி செல்கிறார். அதை கேட்கும் பிரியங்கா அதை நீ பண்ணாத தாமரை என்று கூறுகிறார்.

பாசமா இருந்தா போய் பொழிவ
தொடர்ந்து பேசும் தாமரை செல்வி, ஒருத்தர் பாசமா இருந்தா போய் பொழிவ... ஜில் ஜில்ன்னு... என்று பிரியங்காவை கிண்டலடிக்கிறார். மேலும் உன் பேச்சை தட்டிப் பேசினால் என்னை மட்டம் தட்டுவீயா என்று பாவனியிடம் பிரியங்கா குறித்து கூறி நியாயம் கேட்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ இதனை பார்த்த நெட்டிசன்கள், இன்னைக்கு செம எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கும் போல என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











