நேற்று தெரியலையா? ஏறி வந்த பிகா.. வாயை கிழிச்சுடுவேன் என வாங்கி விட்ட தாமரை.. மிரண்ட ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கொடி கம்ப டாஸ்க்கில் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ் மிரண்டு போயினர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டில் தேர்தல் பிரச்சாரம், முகத்துக்கு நேராகபேசுவது கொடி கம்பங்களை நடுவது என அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெற்றிக் கொடிக் கட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மூன்று கட்சியினரும் தங்களின் கொடியை நட ஆர்வம் காட்டினர். மற்ற கட்சியினர் நட்ட கொடி கம்பங்களை உரக்கச் சொல் அணியினர் கைப்பற்றினர்.

இருவருக்கும் மோதல்

இருவருக்கும் மோதல்

இதையடுத்து மற்ற இரண்டு கட்சிகளும் உரக்க சொல் கட்சியினரின் கொடி கம்பங்களை பறித்தனர். அப்போது அபினய்க்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வாயே திறக்கலை..

வாயே திறக்கலை..

இதில் குறுக்கிட்ட பிரியங்கா, நேற்று இந்த குரல் வரலையே தாமரை, நேற்று உன் புடவையை கிழிச்சப்போ சட்டையை கிழிச்சப்போ வாய மூடிக்கிட்டு இருந்த, இன்னைக்கு வந்து இப்படி கத்துற... நேத்து விளையாடினப்போ இப்படி பேசவில்லையே என அண்ணாச்சியுடன் விளையாடியதை சுட்டிக் காட்டி தாமரையை விளாசினார்.

மோசமான பாடி லாங்குவேஜ்

மோசமான பாடி லாங்குவேஜ்

தாமரையிடம் பேசும் போது மோசமான பாடி லாங்குவேஜ்ஜையும் வெளிப்படுத்தினார் பிரியங்கா. இதனால் கடுப்பான தாமரை, வாயை கிழிச்சுப்புடுவேன் என்று பிரியங்காவை வாங்கி தள்ளினார். இதனை பார்த்த பிரியங்கா நேற்று இப்படி பேசவில்லையே என்று மீண்டும் மீண்டும் தாமரையை சீண்டினார்.

தொழிலை தப்பா பேசுனா..

தொழிலை தப்பா பேசுனா..

ஒரு கட்டத்தில் தெரியலை தெரியலைன்னு சொல்றீங்கள் நாடகம் நல்லா போடுறீங்க என்றும் முழக்கம் போட்டார் பிரியங்கா. இதனால் உடைந்து போன தாமரை செல்வி, எனக்கு நாடகம் தான் உயிர், பெத்த பிள்ளைக்கு பால் கூட கொடுக்க முடியாம நாடகத்துல நடிச்சுருக்கேன். எனக்கு சோறு போட்ட தொழில் அது, அதை தப்பா பேசினா ஏத்துக்க முடியாது என்றும் கூறி கண்ணீர் விட்டார்.

ஆசுவாசப்படுத்திய ராஜு வருண்

ஆசுவாசப்படுத்திய ராஜு வருண்

தாமரை அப்செட் ஆனதை பார்த்த அபினய், தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் ராஜுவும் வருணும் தாமரை செல்வியை ஆசுவாசப்படுத்தி வாக்கிங் போகலாம் என்று அழைத்து சென்றனர். ஆனால் நான் இங்கேயே படுக்கிறேன் என அழுதப்படியே சோஃபாவில் படுத்து கண்ணீர் விட்டார் தாமரை செல்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X