Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வளைச்சு வளைச்சு நாமினேஷன் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.. கன்ஃபென்ஷன் ரூமில் கதறும் தாமரை.. பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம்.
ஸ்மார்ட்டாக மாறிய சிம்பு... புகைப்படங்கள் வெளியிட்டு உற்சாகம்
இதில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் குறைவான வாக்குகளை பெறுபவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த வாரம் நாமினேஷன்
அந்த வகையில் இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என 6 போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.

கேப்டன் டாஸ்க்
இதன் முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது தெரிந்தது. இதில் கொட்டி வைக்கப்பட்ட பஞ்சை பாக்ஸில் சேகரிக்க வேண்டும். அதிகளவு பஞ்சை எடுத்து சேகரிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் தாமரை செல்விக்கும் பிரியங்காவுக்கும் மோதல் ஏற்பட்டது.

பிரியங்கா - தாமரை மோதல்
இதனைதொடர்ந்து இரண்டாவது புரமோ வெளியானது. இதில் பிரியங்காவுக்கும் தாமரை செல்விக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தது. கேப்டனாக தாமரை செல்விக்கு தகுதி இல்லை என்று வாக்குவாதம் செய்தார் பிரியங்கா. இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

நாமினேஷனில் தாமரை
இதில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதும், இதற்காக கன்ஃபெஷன் ரூமில் ஹவுஸ்மேட்ஸ் சக ஹவுஸ்மேட்டுகளை நாமினேட் செய்வதுத் தெரியவந்துள்ளது. இதில் பாவனி, நிரூப் மற்றும் அபினய் ஆகியோர் தாமரை செல்வியை நாமினேட் செய்கின்றனர்.

மட்டம் தட்டி கேவலப்படுத்தி...
ராஜுவும் அக்ஷரா ரெட்டியும் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர். அப்போது பேசும் அக்ஷரா, பிரியங்கா மற்றவர்களை ரொம்பவே மட்டம் தட்டி, கேவலப்படுத்தி, பார்க்குறதுக்கே இரிட்டேட்டிங்கா இருக்கு என்று கூறுகிறார். இதனை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூம்முக்குள் வரும் தாமரை செல்வி முகத்தை முடிக்கொண்டு அழுகிறார்.

யார் வெளியேற வாய்ப்பு?
இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ. யாரெல்லாம் நாமினேஷனில் இடம் பிடிக்கிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும். அதன் அடிப்படையிலேயே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவரும்.