அபிஷேக் காலில் விழுந்து கதறும் தாமரை... காற்றப்பட போவது யார்? பதற வைக்கும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு 5 விலை மதிக்க முடியாத நாணயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாணயங்களை ஹவுஸ்மேட்ஸ் பாதுகாக்க வேண்டும்.

விலை மதிக்க முடியாத நாணயங்கள்

விலை மதிக்க முடியாத நாணயங்கள்

அதே நேரத்தில் அந்த நாணயங்களை கைப்பற்றும் போட்டியாளர்கள் நாமினேஷன் புராசஸ்ஸில் இருந்து தப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் நாணயங்களை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். சிலர் நாணயங்களை கைப்பற்றியும் விட்டனர்.

அபிஷேக் காலில் விழுந்த தாமரை

அபிஷேக் காலில் விழுந்த தாமரை

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தாமரையிடம் பேசும் அபிஷேக் எல்லோரும் உனக்குதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார். இதனைக் கேட்ட தாமரை அபிஷேக்கின் காலில் விழுந்து நீ சொன்ன வார்த்தையே போதும் என்கிறார்.

நெஞ்சோடு அணைத்த அபிஷேக்

நெஞ்சோடு அணைத்த அபிஷேக்

உடனே தாமரையை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் அபிஷேக் அவரை கட்டியணைத்தப்படியே ஆறுதல் கூறுகிறார். இதனை தொடர்ந்து ராஜூவிடம் பேசும் இமான் அண்ணாச்சி யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தாமரையை காப்பாற்ற விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

ஏன் தாமரையை எல்லோரும் சொல்கிறீர்கள்?

ஏன் தாமரையை எல்லோரும் சொல்கிறீர்கள்?

பின்னர் பிரியங்கா மற்றும் அபிஷேக்கிடமும் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார் இமான் அண்ணாச்சி. அவர்களும் தாமரையின் பெயரையே கூற எல்லோரும் தாமரையின் பெயரையே சொல்கிறீர்களே, ஏன் என்று கேட்கிறார்.

சின்னபொண்ண காப்பாத்தலாமே?

சின்னபொண்ண காப்பாத்தலாமே?

மேலும் தாமரையை காப்பாற்ற நிறைய பேர் இருக்காங்க.. நீங்கள் ஏன் சின்னப்பொண்ணை காப்பாற்றக்கூடாது? என்று பிரியங்காவிடம் கேட்கிறார் இமான் அண்ணாச்சி. அதற்கு பதில் கூறும் பிரியங்கா நான் சின்னப்பொண்ணை தான் நாமினேட் செய்திருக்கேன் என்று ஓபனாக சொல்கிறார்.

இது தேவையா தாமரை?

இது தேவையா தாமரை?

இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ. தன்னை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றுவதாக அபிஷேக் கூறியதை கேட்டு அவர் காலில் விழுந்து அழுதுள்ளார் தாமரை. தாமரை அபிஷேக் காலில் விழுந்ததை பார்த்த நெட்டிசன்கள் இது தேவையா தாமரை உங்களுக்கு என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X