பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன்.. எவிக்ஷனில் இருந்து எஸ்கேப்பான தாமரை!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக தாமரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் கேப்டன் இல்லாமல் நேரடியாக டீம்களை பிரித்தார் பிக்பாஸ்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கேப்டன் டாஸ்க்
அதன்படி ராஜா ராஜாதான் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் இடுப்பில் ஒவ்வொரு பலூன் கட்டி விடப்பட்டது. இதில் கடைசி வரை யார் தங்களின் பலூனை உடைக்க விடாமல் பாதுகாக்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என விதிகளை கூறியிருந்தார் பிக்பாஸ்.

இறுதி வரை டஃப்
இதில் ஆட்டத்தின் ஆரம்பத்தில் நிரூப் மற்றும் அக்ஷரா ஆகியோர் பட படவென சக போட்டியாளர்களின் பலூன்களை உடைத்தனர். ஆனால் மூன்றாவது ரவுண்டிலேயே கோட்டை விட்டார் அக்ஷரா. ஆனால் நிரூப் இறுதி வரை நல்ல டஃப் கொடுத்தார்.

அண்ணாச்சியுடன் வாக்குவாதம்
இடையே சில பல வாக்குவாதங்களும் ஏற்பட்டது. டாஸ்க்கின் ரூல்ஸ் புரியாமல் அபினய், ஆட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கினார். இருப்பினும் விதிகளை ஸ்ருதி படித்துக் காண்பிக்க புரிந்து கொண்டார். இதனால் அண்ணாச்சியுடன் சிறிது நேரம் வாக்குவாதமும் ஏற்பட்டது.

நாடகமா? நாட்டுப்புறமா?
தொடர்ந்து பலரையும் மிரட்டி வந்த நிரூப் இறுதி சுற்றில் கோட்டை விட்டார். இறுதியாக தாமரைக்கும் சின்னப்பொண்ணுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நாடகமா நாட்டுப்புறமா என கேட்டு விரட்டினார். இதனை தொடர்ந்து தன்னுடைய பலூனை தானே உடைத்துக் கொண்டு விட்டுக் கொடுத்தார் சின்னப்பொண்ணு.

தாமரை தேர்வு
இதனால் பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தாமரை செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டின் இந்த வார எவிக்ஷன் புராசஸில் இருந்து தப்பித்துள்ளார் தாமரை. பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்வான தாமரைக்கு பிக்பாஸ் உட்பட ஹவுஸ்மேட்ஸ் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











