தாமரை சாத்து சாத்துன்னு சாத்துறாங்க... பிக்பாஸ் புரமோவை பார்த்து குஷியான ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை வச்சு செய்ய சரியான ஆள் தாமரை செல்விதான் என கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்காவின் பெயர் நாளுக்கு டேமேஜ் ஆகி வருகிறது. தாமரை, இமான் அண்ணாச்சி , ராஜு என சில குறிப்பிட்ட போட்டியாளர்களை மட்டும் டார்கெட் செய்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக இமான் அண்ணாச்சியையும் தாமரை செல்வியையும் பார்த்தால் பிரியங்காவுக்கு பிடிக்கவே இல்லை. கடந்த வாரம் தாமரை கேப்டன் ஆகக்கூடாது என்று நினைத்த பிரியங்கா, கேப்டன் ஆவதற்கான தகுதி தாமரைக்கு இல்லை என கூறி தடுத்தார்.

அண்ணாச்சியை குறி வைத்து
நேற்றைய எபிசோடில் சிபி, அபிஷேக், இமான் அண்ணாச்சி ஆகிய 3 பேர் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்ற போது, இமான் அண்ணாச்சி கேப்டன் ஆகக்கூடாது என அவரை மட்டுமே குறி வைத்து தாக்கினார். அதன் பின் நடந்த வாக்குவாதத்தின் போதும் கூட அண்ணாச்சி வேலை செய்யாமல் ஓபி அடிப்பதாக கூறிய பிரியங்கா, கடைசி வரை அவர் எப்போது ஓபி அடித்தார் என சொல்லவே இல்லை.

மீண்டும் கிழித்துவிட்ட தாமரை
இதனாலேயே சமூக வலைதளங்களில் பிரியங்காவை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் தாமரை போல் பேசி அவரை இன்சல்ட் செய்தார் பிரியங்கா. ஆனால் தாமரை தடாலடியாக பேசி பிரியங்காவின் முகத்திரையை மீண்டும் கிழித்துள்ளார்.

வெளுத்து வாங்கும் தாமரை
அதாவது எப்போதும் தன் குரல் மட்டுமே உயர்ந்து இருக்க வேண்டும் மற்ற அனைவரும் தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரியங்கா என்றும் கூறும் தாமரை இதை நான் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன் வெளுத்து வாங்குகிறார். இதனைக் கேட்ட பிரியங்காவின் முகத்தில் ஈயாடவில்லை.

பெயரை கெடுத்துக்கொண்டு...
இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, எத்தனை முறை அடி வாங்கினாலும்
ஒன்றும் நடக்காதது போல் மக்களே என்று காட்டுக் கூச்சல் போடும் பிரியங்கா இனியும் தாமரையை கொண்டாடினால் மிக மோசமான டேஞ்சர் ஸோன் வருவீர்கள்.. அர்ச்சனா போல பல வருட நற்பெயரை உள்ளே வந்து நீங்களும் கெடுத்துக் கொண்டதுதான் பலன் ... பெட்டர் லக் இன் நெக்ஸ்ட் விஜய் டிவி ஷோ என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ராணி பிரியங்கா
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
நம்ம பேச்சு மட்டும் தான் உசந்தது மத்தவங்களாம் நமக்கு கீழனு நினைக்கிறது பிரியங்காதான்.. என தாமரை கூறியதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், அரசியல் ராணி பிரியங்கா என பதிவிட்டுள்ளார்.

கடைசி வரை சொல்லவே இல்லை
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நேற்றைய எபிசோடில் பிரியங்காவின் முகமூடி கழண்டது. அண்ணாச்சியை ஓபி அடிக்கிறார்னு சொன்னவர் எப்போ , எங்கே, எந்த வேலை செய்யாம ஓபி அடிச்சார்னு கடைசிவரை சொல்லவே இல்லை.. காயத்ரி, அர்ச்சனா, வனிதா எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் பிரியங்கா .. என்று பதிவிட்டுள்ளார்.

சாத்து சாத்துனு சாத்துறாங்க
இன்றைய முதல் புரமோவில் பிரியங்காவை தாமரை செல்வி விளாசியதை பார்த்த இந்த நெட்டிசன், என்ன கெத்தா உட்காந்து பேசுது அக்கா என தாமரையை குறிப்பிட்டுள்ளார். மேலும் தாமரை சாத்து சாத்துனு சாத்துறாங்க... என்றும் பதிவிட்டுள்ளார்.

நீங்க என்ன பண்றீங்க?
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா பேச்சு மட்டும் தான் உசந்தது..செயல் இல்ல... தாமரை உழைப்பாளி சரி.. சோஷியல் சர்வீஸ் பண்றாங்க சரி. நீங்க ஏன் குடிச்ச காஃபி கப் கூட சிங்க்ல போட மாட்டுறீங்க? இமான் அண்ணாச்சி ஓபி அடிக்கிறாரு நீங்க என்ன பண்றீங்க? என கேட்டு பிரியங்காவை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











