சாப்பிட வித்தியாசமா செஞ்சா கொடுக்கவே மாட்றாங்க... ராஜு செய்த நூடுல்ஸால் நொந்து போன தாமரை!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான உணவுகள் சமைத்தால் தங்களுக்கு கொடுப்பதில்லை என ஆதங்கப்பட்டுள்ளார் தாமரை.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை அகம் டிவி வழியாக சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் கமல்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் முன்பாக பார்வையாளர்களை சந்தித்த நடிகர் கமல் ஹாசன், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஃபைட் சீன்
பின்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காட்சிகள் ஒளி பரப்பப்பட்டது. இதில் மழையில் ஆட்டம் போட்டனர் ஹவுஸ்மேட்ஸ். அப்போது ஃபைட் சீன்னை அரங்கேற்றிய பிரியங்கா விளையாட்டாக ராஜுவை எட்டி உதைத்தார். இதனை தொடர்ந்து நிரூப் தன்னை கேட்காமல் பாலை எடுத்துவிட்டதாக கூறி பெட்ரூமில் பஞ்சாயத்து பண்ணினார் இசை.

தாமரைக்கு கொடுக்கவில்லை
அதனை தொடர்ந்து கிட்சனில் நூடுல்ஸ் செய்தார் ராஜு. இதனை பெட்டில் படுத்தப்படி பார்த்துக் கொண்டிருந்த தாமரை நூடுல்ஸ் போன்று ஏதாவது வித்தியாசமாக செய்தால் நமக்கெல்லாம் கொடுக்க மாட்டேங்கிறார்கள். அங்கேயே அவர்களுக்குள்ளேயே செய்து சாப்பிட்டு விடுகிறார்கள்.

ஆதங்கப்பட்ட தாமரை
நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ ஒரு வார்த்தை கேட்கலாம் இல்லையா என்று இசைவாணி, மற்றும் சின்னப்பொண்ணுவிடம் கூறி ஆதங்கப்பட்டார் தாமரை. தாமரை கூறியதை போலவே நூடுல்ஸ் செய்த ராஜு தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு மட்டுமே கொடுத்தார்.

தாமரையை கேட்கவில்லை
சில ஹவுஸ்மேட்டுகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கொடுத்தார் ராஜு. பின்னர் தானும் எடுத்து சாப்பிட்டார். ஆனால் பெட்ரூம்முக்குள் இருந்தவர்களுக்கு கொடுக்கவும் இல்லை, அவர்களை கேட்கவும் இல்லை.

உனக்கு கொடுத்ததே பெருசு
அப்போது அங்கு வந்த ஐக்கி பெர்ரி, தாமரை அக்காவுக்கும் கொடுங்கள் என்றார். ஆனால் உனக்கு கொடுத்ததே பெரிய விஷயம், இதில் அவருக்கு வேறு கொடுக்கணுமா என்று கேட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிரத்தார். இதனை தொடர்ந்து வெளியே வந்த தாமரையிடம் சாப்பிடுறீயா என கேட்டார்.

பதில் சொல்ல முடியாது
கோபத்தில் இருந்த தாமரை எனக்கு வேண்டாம் என்று கூறி, வருணிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். இந்த விவகாரத்தை கார்டன் ஏரியாவிலும் பேசினர் தாமரையும் ராஜும். ஆனால் ராஜு இது பெரிய விஷயமே இல்லை , இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று ஃபுல் ஸ்டாப் வைத்தார்.


Click it and Unblock the Notifications