இக்னோர் பண்ணிட்டு போறாங்க.. இசைவாணியிடம் புறணி பேசும் பாவனி... இனிமே நிறைய கன்டென்ட் இருக்கும் போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ரிவ்வியூ செய்தார் நடிகர் கமல்ஹாசன்.
லைக் அன்ட் டிஸ்லைக் கேம்களை கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் பற்ற வைத்தார் பிக்பாஸ். இதனால் நேற்றே சில போட்டியாளர்கள் கண்ணீர் விட்டதையும் சக போட்டியாளர்களிடம் விளக்கம் சொன்னதையும் பார்க்க முடிந்தது.

முதல் முறை நாமினேஷன்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது காட்டப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்று முதல் முறையாக நாமினேஷன் செய்தனர். இதன் மூலம் இந்த சீசனின் முதல் நாமினேஷன் இன்று நடைபெற்றது.

யார் நாமினேட் ஆனார்கள்?
இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்தார் பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பெட்ரூமில் புறணி பேசும் பாவனி
இதில் பெட்ரூமில் இசைவாணி, பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் தனியாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது இசைவாணியிடம் பேசும் பாவனி, நான் போய் பேசினாலும் இக்னோர் பண்ணிட்டு வேற பக்கம் போய் பேசுறாங்க. எனக்கு நல்லா தெரியுது.. பல முறை அதை உணர்ந்திருக்கிறேன் என கூறுகிறார்.

கம்ஃபர்ட் குரூப்ஸ்
அப்போது குறுக்கிடும் ஐக்கி பெர்ரி எல்லாரும் உன்னை கூப்பிடும் போது நீ என் தனியா ஃபீல் பண்ற என்று கேட்கிறார். அதற்கு பதில் கூறும் பாவனி, கம்ஃபர்ட்டான குரூப்ஸ் இருக்கீங்க என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி டீம்மா இருக்கட்டும் அக்ஷரா டீம்மா இருக்கட்டும் நான் தான் வாலண்டரியாக போய் பேசுகிறேன் என்கிறார்.

சூடு பிடிக்கும் பிக்பாஸ்
இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பின்னால் பேச ஆரம்பித்துள்ளனர். இதேபோல் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்றும் இனிமேல் நிறைய கண்டென்ட் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











