வன்மத்தை கக்கும் பிரியங்கா.. சோறு போட்ட தொழில் நாடகம்.. நொறுங்கி போன தாமரை.. கலங்க வைக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் மாநாடு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தலா 4 பேர் என ஒவ்வொரு கட்சி என மூன்று கட்சிகளாக பிரிந்துள்ளனர்.
சஞ்சீவ் தலையில் என்பிபி என்ற கட்சியும் ராஜு தமையில் பிபி மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியும் பிரியங்கா தலைமையில் உரக்க சொல் என்ற கட்சியும் உள்ளது.

முகத்தை காட்டிய பிரியங்கா
டாஸ்க்கின் இரண்டாம் நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் அனல் பறக்கிறது. முதல் புரமோவில் பிரியங்கா சாப்பாட்டு விஷயத்தில் ஹவுஸ்மேட்டுகளிடம் முகத்தை காட்டினார். இதனால் சிபி கடுப்பானார். இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் அபினய் தாமரையிடம் எகிறினார். இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடகம் நல்லா போடுறீங்க
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா, தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா போடுறீங்க என்று தாமரையை பார்த்து கோஷம் போடுகிறார். பிரியங்காவின் முழக்கத்தை கேட்டு அப்செட் ஆகிறார் தாமரை.

சோறு போட்ட தொழில் நாடகம்
தாமரையை சமாதானப்படுத்தும் ராஜு, உன்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்கிறார்கள் என்கிறார். அதனைக் கேட்ட தாமரை தனது ஸ்லாங்கில் சாமி, சோறு போட்ட தொழிலையெல்லாம் அப்படி பேசக்கூடாது.. அப்படிலாம் என்னால போக முடியாது. உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தெரியலாம்.

நொறுங்கிப் போன தாமரை..
எனக்கு நாடகம்தான் உயிர்.. புரியுதா? எனக்கு இந்த கேம்மே வேண்டாம்.. பச்ச புள்ளைக்கு பால் கூட கொடுக்க முடியாம நான் போய் நாடகம் போட்டீருக்கேன்.. என்று கண்ணீர் விடுகிறார். மேலும் இங்கு நாடகம் போட்டு எனக்கு என்னப்பா கிடைக்க போகுது என்று கதறியப்படியே நொறுங்கிப் போகிறார் தாமரை செல்வி.

தாமரைதான் டார்கெட்
தொடர்ந்து தனது கட்சியினருடன் பேசும் பிரியங்கா தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா ஆடுறீங்க... அது வந்து எங்களின் ஸ்லோகன்... என்று கூறுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவுக்கு தாமரை பிக்பாஸ் வீட்டில் இருப்பதே பிடிக்கவில்லை, அதனால் தான் அவரும் அவரது கட்சியினரும் தாமரையை டார்கெட் செய்து வருகின்றனர் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











