ஃபுல் ஸ்க்ரிப்ட்டும் லீக் ஆயிடுச்சே? பிக்பாஸ் எவிக்ஷன் லிஸ்ட்.. அடுத்த வாரம் இவரா? வைரலாகும் போட்டோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கவுள்ள எவிக்ஷன் குறித்த லிஸ்ட் என போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் மூன்றாம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திருநங்கையான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து வழக்கம் போல் வாரா வாரம் எவிக்ஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நபராக சின்னப்பொண்ணு
அந்த வகையில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து மலேசிய மாடலான நாடியா சங் வெளியேறினார். அவரை தொடர்ந்து இரண்டாவது நபராக அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் மூன்றாவது நபராக நேற்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

எவிக்ட் ஆகப்போகிறவர்கள் யார்?
தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் முதல் வாரம் முதல் கடைசி வரை எவிக்ட் ஆகப் போகிறவர்கள் யார்? வின்னர் யார்? ரன்னர் யார் என்பது குறித்த தகவல்கள் குறித்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த வாரம் இவரா?
அதில் இதுவரை எவிக்ட் ஆனவர்கள் குறித்த தகவல் சரியாக உள்ளது. அதனை தொடர்ந்து 35வது நாள் அதாவது அடுத்த வாரம் எவிக்ட் ஆகி போகிறவர் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதன்படி அடுத்த வாரம் ஜெமினி கணேசன் - சாவித்திரி அவர்களின் பேரனான அபினய் வட்டி வெளியேறுவார் என கூறப்பட்டுள்ளது.

5வது எவிக்ஷன் அவரா?
அவரை தொடர்ந்து 42 நாள் 5 வது எவிக்ஷனாக பிக்பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேறுவார் என கூறப்பட்டுள்ளது. பாவனி ரெட்டி ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக இருப்பார் என்றும் வின்னர் ராஜுதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ரன்னர் அப் பிரியங்கா தான் என்றும் அந்த லிஸ்ட்டில் உள்ளது.

விஜய் டிவி புராடெக்ட்டுகள்
இதில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எவிக்ட் ஆகிறார்கள் என்று போடப்பட்டுள்ளதே தவிர எப்போது என்று குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக ராஜு, பிரியங்கா மற்றும் பாவனி ஆகிய 3 பேருமே விஜய் டிவி புராடெக்ட்டுகள் என்பதால் அவர்களின் பெயர் இறுதி வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு உண்மை?
ஆனால் அதையும் தாண்டி மக்கள் ஓட்டின் அடிப்படையிலேயே இதுவரை போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகையால் இந்த போட்டோவில் இடம் பெற்றுள்ள தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மைதானா என்பது வரும் 2 வாரங்களில் நடைபெறும் எவிக்ஷன்களிலேயே தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











