எந்த டாஸ்க் கொடுத்தாலும் சண்டைதானா? நிரூப்புக்கும் வருணுக்கும் வெடித்த மோதல்.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப்புக்கும் வருணுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
எந்த டாஸ்க்காக இருந்தாலும் எக்குத்தப்பாகவே செய்து கதறவிட்டு வருகிறார் நிரூப்.

கடுப்பாகும் ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் கொடுக்கும் அனைத்து டாஸ்க்குகளிலும் தனக்கென ஒரு விதியை வகுத்து அதன்படி விளையாடி வருகிறார். அவரது ஆட்டம் சுவாரசியமாக இருந்தாலும் மற்ற போட்டியாளர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதால் அவர் மீது ஹவுஸ்மேட்ஸ் கடுப்பாகியுள்ளனர்.

நான் விட மாட்டேன்
அதிலும் குறிப்பாக நிரூப்புக்கும் வருணுக்கும் வாய்க்கால் சண்டை வரப்பு சண்டை உள்ளது போல் விளையாடி வருகின்றனர். வருண் என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை என ஈகோ காட்டி வருகிறார் நிரூப். ஆனாலும் நான் விட மாட்டேன் என விடாப்பிடியாக உள்ளார் வருண்.

டாஸ்க்கிலும் தீயாய்..
நேற்றைய எபிசோடிலும் கூட இருவருக்கும் இடையே முட்டிக் கொண்டது. கண்ணாடி டாஸ்க்கின் போது நிரூப் குறித்து மனதில் பட்டதையெல்லாம் பேசி வெறுப்பேற்றினார் நிரூப். இதேபோல் பலூன் தண்ணீரை அடித்துக்கொள்ளும் டாஸ்க்கிலும் தீயாய் இருந்தனர்.

உள்ளே வெளியே டாஸ்க்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் உள்ளே வெளியே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹவுஸ்மேட்ஸ் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். பெடஸ்டலில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பவுலில் பால் போட வேண்டும். ஆக்டிவிட்டி ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கில் இமான் அண்ணாச்சியும் ஐக்கி பெர்ரியும் மோதுகின்றனர்.

இருவருக்கும் வாக்குவாதம்
இதேபோல் பிரியங்காவும் ராஜுவும் மோதுகின்றனர். இதில் பாகற்காய் ஜூஸ் குடிக்கும் போட்டியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதில் எதிர் எதிர் அணியில் உள்ள நிரூப்புக்கும் வருணுக்கும் இன்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. டாஸ்க் தொடர்பாக இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இன்றும் அனல் பறக்கும்
அப்போது பேசும் வரும் என்ன லாஜிக்கில் பேசினாலும் நாங்கள் தான் வின் என்கிறார். வாக்குவாதத்தை தவிர்க்க முயலும் இமான் அண்ணாச்சி நான் வெற்றி பெறவே இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறார். இதனால் இன்றைய எபிசோடிலும் அனல் பறக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











