பாத்ரூமில் பேபியான அக்ஷரா.. ஐக்கி... பனிஷ்மென்ட் கொடுக்கும் ஜோரில் பெடஸ்டல் க்ளாஸை உடைத்த வருண்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அக்ஷரா மற்றும் ஐக்கி பெர்ரிக்கு பனிஷ்மென்ட் கொடுத்த வருண் தனது காய்ன் வைக்கப்பட்டிருந்த பெடஸ்டலை கீழே தள்ளி உடைத்தார்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீரின் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் காய்னை வைத்துள்ள வருணுக்கு ஸ்பெஷல் ஆளுமைகள் வழங்கப்பட்டுள்ளன.

வருண் நினைத்தால் பாத்ரூம் முதல் கிட்சன் வரை எங்கெல்லாம் தண்ணீர் வருகிறதோ அனைத்தையும் நிறுத்த முடியும். போட்டியாளர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரை நிறுத்தி விளையாடி வருகிறார் வருண்.

கண்ணாடி டாஸ்க்

கண்ணாடி டாஸ்க்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்டுகளுக்கு கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மனதில் உள்ளதையெல்லாம் தங்களுடன் டெர்ம்ஸ் சரியில்லாத போட்டியாளர்களிடம் கொட்டித்தீர்த்தனர் ஹவுஸ்மேட்ஸ். நிரூப் அபினய்யிடமும், இசைவாணி அண்ணாச்சியிடமும், சிபி அக்ஷராவிடமும் தங்களின் மனதில் பட்டதை பேசி கலங்க வைத்தனர்.

வாய் மீது கை வைத்து

வாய் மீது கை வைத்து

இதனை தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள வருண், அக்ஷராவுக்கும் ஐக்கி பெர்ரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று டாஸ்க் கொடுத்தார். இருவரையும் பெஞ்ச் மீது ஏறி ஒற்றைக் காலில் நிற்குமாறு கூறிய வருண் வாய் மீது கை வைத்து பேபி போல் பேசுமாறு கூறினார்.

குழந்தையை போல் பேசி

குழந்தையை போல் பேசி

அப்போது அங்கு நிரூப் வர, அவருக்கும் பனிஷ்மென்ட் கொடுத்தார் வருண். இதனால் அவரும் பேபியை போல் என்னாச்சு? ஏன் இந்த பனிஷ்மென்ட் என்று கேட்டார். அதற்கு பாத்ரூம் போக வந்த தனக்கு இப்படி பனிஷ்மென்ட் கொடுத்துவிட்டதாக குழந்தையை போல் கூறினார் ஐக்கி. அவரை தொடர்ந்து உதட்டை குவித்து குழந்தை போல் பேசிய அக்ஷரா, வெளியில் நின்ற என்னை கூப்பிட்டு இப்படி ஒரு பனிஷ்மென்ட்டை கொடுத்துவிட்டதாக கூறினார்.

உடைந்து நொறுங்கிய கண்ணாடி பாக்ஸ்

உடைந்து நொறுங்கிய கண்ணாடி பாக்ஸ்

அப்போது பனிஷ்மென்ட் கொடுக்கும் ஜோரில் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் நடந்து சென்ற வருண், பெடஸ்டலின் மீது மோதினார். இதில் காய்ன் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாக்ஸ் கீழே விழுந்து நொறுங்கியது. இதற்காக பிக்பாஸிடம் சாரி கேட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருந்தவர்களை அழைத்து பனிஷ்மென்ட் கொடுத்தால் இப்படிதான் நடக்கும் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X