Don't Miss!
- News
தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தமித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த வாரம் யாரை வெளியே அனுப்புவது? பயங்கர குழப்பத்தில் விஜய் டிவி.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரை அனுப்புவது என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் பாவனி, பிரியங்கா, நிரூப், அக்ஷரா, சிபி மற்றும் வருண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
6 பேருமே டஃபான போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பிக்பாஸ்
வீட்டுக்குள்
இருக்கும்போதே
குவியும்
வாய்ப்பு...
வருண்
கைவசம்
உள்ள
படங்களை
பாருங்க!

பாவனி மீது அதிருப்தி
இந்த 6 பேரில் அதிகம் சர்ச்சைக்கு ஆளானவர் பாவனிதான். அபினய்யை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பாவனி அவரை தனக்கு பிடிக்காது என சக போட்டியாளர்களிடமும் கூறினார். இதனால் கடுப்பான ரசிகர்கள் பிடிக்காத ஒருத்தரை அவாய்ட் செய்திருக்கலாமே ஏன் அவருடன் பழக வேண்டும் என்று விளாசினார்.

கண்டிப்பு காட்டவில்லை
ஏற்கனவே பாவனியின் இரண்டாம் திருமணம் குறித்து சர்ச்சை பரவிய நிலையில் பாவனி பிக்பாஸ் வீட்டில் அபினய் மற்றும் அமீருடன் நெருக்கமாக பழகியது பேசு பொருளானது. மேலும் தன் பின்னால் சுற்றும் அமீரிடமும் கண்டிப்பு காட்டாமல் சிரித்தப்படியே கடந்து செல்கிறார் பாவனி.

வருணை வெளியேற்ற முடிவு
எந்த டாஸ்க்கிலும் பாவனி வெற்றி பெற்றதாகவும் தெரியவில்லை. இதனால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருணை வெளியேற்ற நிகழ்ச்சி குழு முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் தற்போது எவிக்ட் செய்யமுடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

வருணுக்கு வரவவேற்பு
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருண் நடிக்கும் ஜோஷ்வா படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் வருணை எப்படி வெளியேற்றுவது என யோசித்து வருகிறதாம் பிக்பாஸ் டீம். அதே நேரத்தில் வருணுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

பெரும் குழப்பத்தில் விஜய் டிவி
சக போட்டியாளர்களிடம் ரொம்பவே நீட்டாக நடந்து கொள்கிறார் வருண். அவர் ஃபினாலே வரை வர வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் வருணை வெளியேற்றினால் ரசிகர்கள் கடுப்பாவார்கள் என்பதால் இந்த வாரம் யாரை வெளியேற்றுவது என பெரும் குழப்பத்தில் உள்ளதாம் பிக்பாஸ் டீம்.

நாளை மாலை தெரிந்துவிடும்
இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிகிறது. இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்பது நாளைய மாலை வழக்கம் போல் கசிந்துவிடும். ஆகையால் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் நாளை மாலையே தெரிந்து விடும்.