சூடுபிடிக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5.. பிரபல நடிகரை வளைத்துப்போட தீவிர பேச்சு.. யாருன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பிரபல நடிகருடன் நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.

ஆரி டைட்டில் வின்னர்

ஆரி டைட்டில் வின்னர்

முதல் சீசனில் மாடலான ஆரவ் டைட்டில் வின்னரானார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னரானார். மூன்றாவது சீசனில் மலேசிய பாடகரான முகென் ராவ் டைட்டிலை வென்றார். நான்காவது சீசனில் ஆரி அர்ஜூனன் வின்னரானார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல்தான் இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

ஏற்பாடுகள் தொடக்கம்

ஏற்பாடுகள் தொடக்கம்

இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் ஜூன் இறுதியில் பிக்பாஸ் சீசன் 5 ஐ தொடங்க நிகழ்ச்சி குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது நிகழ்ச்சி குழு.

பிரபல நடிகரிடம் பேச்சு

பிரபல நடிகரிடம் பேச்சு

கமல் அரசியல், சினிமா என பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பிரபல நடிகரிடம் நிகழ்ச்சிக் குழு பேசி வருவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தேவயானியின் தம்பி

தேவயானியின் தம்பி

அதாவது நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுலிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். நடிகர் நகுல் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

வளைத்துப்போட..

வளைத்துப்போட..

தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னணி பாடகரான நகுல் ஏராளமான ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இவரை பிக்பாஸ் சீசன் 5ல் வளைத்துப் போடும் வேலையில் இறங்கியுள்ளது விஜய் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X