போன முறை மிஸ் ஆயிருச்சு.. இந்த முறை இவர்தான் பிக்பாஸில் மெயின் என்ட்ரியாம்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி எந்தெந்த பிரபலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. கடந்த ஆண்டே முடிய வேண்டிய இந்நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக தாமதமாக தொடங்கி இந்த ஆண்டுதான் நிறைவடைந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையாவது சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் என நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலையில் தீயாய் இறங்கியுள்ளது.

பிரபலங்களிடம் பேச்சு

பிரபலங்களிடம் பேச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க பிரபலங்கள் பலரிடம் தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடிகர் நகுல், குக் வித் கோமாளி கனி ஆகியோரிடம் விஜய் டிவி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

மெயின் போட்டியாளராக

மெயின் போட்டியாளராக

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 குறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சீசனில் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என கூறப்பட்ட ஆசிம் இந்த சீசனில் மெயின் போட்டியாளராக பங்கேற்பார் என கூறப்படுகிறது.

நெருங்கி பழகிய ஷிவானி

நெருங்கி பழகிய ஷிவானி

கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஷிவானிக்கும் சீரியல் நடிகர் ஆசிம்முக்கும் காதல் என தகவல் வெளியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி பாலாஜியுடன் நெருக்கமாக பழகினார்.

குவாரண்டைனில் ஆசிம்

குவாரண்டைனில் ஆசிம்

இதனால் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக குவாரண்டைனில் இருந்த ஆசீம் திடீரென பங்கேற்க போவதில்லை என அறிவித்தார்.

மெயின் என்ட்ரி

மெயின் என்ட்ரி

இந்நிலையில் இந்த சீசனில் அவரை மெயின் என்ட்ரியாக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம் விஜய் டிவி. இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுனிதாவிடமும் பிக்பாஸ் டீம் டீலிங் பேச ஆரம்பித்துள்ளது.

சூப்பர் சிங்கர் பிரபலம்

சூப்பர் சிங்கர் பிரபலம்

மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாம் விஷாலிடமும் பிக்பாஸ் டீம் தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சீசனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆஜித் பங்கேற்ற நிலையில் இந்த சீசனில் சாம் விஷாலை உள்ளே அனுப்ப வேலைகள் தொடங்கியுள்ளதாம்.

முரட்டு சிங்கிள்ஸ்

முரட்டு சிங்கிள்ஸ்

இதேபோல் விஜய் டிவியின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இனியனிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறையும் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களுடனே பிக்பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தொகுப்பாளர் மாற்றம்?

தொகுப்பாளர் மாற்றம்?

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவுடன் விஜய் டிவி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் அரசியல், அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருப்பதால் இம்முறை தொகுப்பாளர் மாற்றப்படுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X