பெரிய டிவிஸ்ட்டா இருக்கே... இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜாவுக்கு பிக்பாஸ் இரண்டாவது வாய்ப்பு வழங்கினார். இதன் மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அபிஷேக் ராஜா, இம்முறையும் இரண்டே வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

நாமினேஷன் லிஸ்ட்டில்

நாமினேஷன் லிஸ்ட்டில்

கடந்த வாரம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸில் 7 பேர் இடம் பிடித்தனர். அதன்படி அபினய், இமான் அண்ணாச்சி, அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை, சிபி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.

அபினய்யை அனுப்பமாட்டார்..

அபினய்யை அனுப்பமாட்டார்..

அவர்களில் அபினய் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாவனிக்கும் அபினய்க்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் குறித்த பிரச்சனை ஹாட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பிக்பாஸ் அபினய்யை இந்த வாரம் அனுப்ப மாட்டார் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சிபி அதிக வாக்குகள்

சிபி அதிக வாக்குகள்

இதனிடையே அன் அஃபிஷியல் வாக்குப்பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிபி அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தாமரை செல்வி இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நிரூப்பும், நான்காவது இடத்தில் இமான் அண்ணாச்சியும் உள்ளனர்.

பிரியங்கா பெயர் டேமேஜ்

பிரியங்கா பெயர் டேமேஜ்

ஐந்தாவது இடத்தில் அக்ஷராவும் ஆறாவது இடத்தில் நிரூப்பும் கடைசி இடத்தில் அபினய்யும் உள்ளனர். அபினய்யை வெளியே அனுப்ப வாய்ப்பு இல்லை என்பதால் இந்த வாரம் நிரூப் அல்லது அக்ஷரா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. பிரியங்கா நிரூப்பிடம் மல்லுக்கட்டி வருவதால் அவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

இதனால் அபிஷேக் ராஜாவை வெளியேற்றியது போல் நிரூப்பையும் வெளியேற்றலாம் என்கின்றனர் நெட்டிசன்கள். அதேநேரத்தில் இமான் அண்ணாச்சியை வெளியேற்றி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள்.

டாப்பில் தாமரை செல்வி

டாப்பில் தாமரை செல்வி

இதேபோல் பிக்பாஸ் வோட்ஸ் தமிழ் வலைதளத்தில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்று தாமரை செல்வி டாப்பில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அபினய் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அக்ஷரா மூன்றாவது இடத்திலும், நிரூப் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

டபுள் எவிக்ஷன் இருக்கலாம்

டபுள் எவிக்ஷன் இருக்கலாம்

மேலும் ஐந்தாவது இடத்தில் வைல்டு கார்டு என்ட்ரியான அமீரும் ஆறாவது இடத்தில் சிபியும் உள்ளனர். கடைசி இடத்தில் இமான் அண்ணாச்சி உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இமான் அண்ணாச்சி, நிரூப் மற்றும் அக்ஷரா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் நாளை வெளியேற்றப்படுவார் என்று கூறி வருகின்றனர். இதனிடையே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X