டேஞ்சர் ஸோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்.. மெல்ல மெல்ல முன்னேறும் அபிஷேக்.. அப்போ இந்த வாரம் அவரா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதற்காக நாமினேஷன் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தலா இரண்டு அல்லது மூன்று பேரை வாரம் தோறும் நாமினேட் செய்து வருகின்றனர். அவர்களில் மக்களின் குறைந்து வாக்குகளை பெறும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

வைல்டு கார்ட் என்ட்ரி

வைல்டு கார்ட் என்ட்ரி

அந்த வகையில் இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலரின் எவிக்ஷன் மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக இருந்தது. ஒரு பக்கம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டாலும் மறுபக்கம் வைல்டு கார்ட் என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

அதன்படி இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜாவுக்கு மீண்டூம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர் ஆகியோரும் வைல்டு கார்ட் என்ட்ரிகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷ் புராசஸில், நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகியோரை தவிர மற்ற அனைவருமே இடம் பிடித்துள்ளனர்.

அமைதி தொலைந்து விட்டது...

அமைதி தொலைந்து விட்டது...

அதன்படி சிபி, தாமரை செல்வி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, ராஜு, வருண், பாவனி, அபினய், அபிஷேக் ராஜா ஆகிய 10 பேர் இடம் பிடித்துள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறியது. அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து வீட்டின் அமைதி தொலைந்து விட்டதாக கருதுகிறார்கள் ரசிகர்கள்.

உணராத அபிஷேக்..

உணராத அபிஷேக்..

எந்த டாஸ்க் என்றாலும் மற்றவர்களை வெறுப்பேற்றும் வகையிலேயே நடந்து கொள்கிறார் அபிஷேக் ராஜா. எதற்காக மக்கள் அவரை வெளியேற்றினார்கள் என்பதை உணராமலேயே மீண்டும் மீண்டும் தான் சொல்படிதான் மற்றவர்கள் விளையாட வேண்டும் என ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

கடந்த வாரம் எஸ்கேப்

கடந்த வாரம் எஸ்கேப்

அபிஷேக் பேசுவதை பார்த்தே கடுப்பாகின்றனர் நெட்டிசன்கள். ஆகையால் அவரை இந்த வாரம் எப்படியாவது வெளியேற்றுங்கள் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் அவருக்கு முதல் வாரம் என்பதால் நாமினேஷனில் இருந்து தப்பித்தார் அபிஷேக்.

வெளியேற்றப்பட வேண்டும்..

வெளியேற்றப்பட வேண்டும்..

ஆனால் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் எப்படியாவது அவரை வெளியேற்றிவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். இதனால் நேற்று வரை கடைசி இடத்தில் இருந்தார் அபிஷேக். இதன்காரணமாக அவர்தான் வெளியேற்றப்படுவார் என்று கூறி வந்தனர்.

மெல்ல முன்னேறி வருகிறார்

மெல்ல முன்னேறி வருகிறார்

ஆனால் பிக்பாஸ் அன் அஃபிஷியல் வோட்டிங் அடிப்படையில் கடைசி மூன்று இடங்களில் அபினய், வருண் மற்றும் அபிஷேக் ஆகியோர் இடம் பிடித்து டேஞ்சர் ஸோனில் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்குள்ளும் சொற்ப வாக்குகள் வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதிலும் இன்று அபிஷேக் மெல்ல முன்னேறி வருகிறார்.

யார் வேண்டுமானாலும்

யார் வேண்டுமானாலும்

இதனால் இந்த வாரம் அபினய் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோல் வருணும் குறைந்த ஓட்டுக்களையே பெற்றுள்ளார். வாக்களிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் இவர்கள் மூன்று பேரில் யார் வேண்டுமானாலும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

ராஜு டாப்பில்

ராஜு டாப்பில்

அதேநேரத்தில் இதுவரை பதிவான வாக்குகளின் அடிப்படையில் ராஜு அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பிரியங்காவும் மூன்று நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் பாவனி, தாமரை செல்வி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X