அச்சச்சோ.. டேஞ்சர் ஸோனில் இருப்பவர் இவர்தான்.. கசிந்தது இதுவரை பதிவான வாக்கு எண்ணிக்கை தகவல்!

சென்னை: பிக்பாஸ் எவிக்ஷன் புராசஸில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்த வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி என 6 போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வைல்டு கார்டு

இரண்டு வைல்டு கார்டு

ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அதேபோல் வைல்டு கார்டு என்ட்ரிகளாக டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை நடிகரான சஞ்சீவ் ஆகியோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனால் வரும் வாரங்களில் பிக்பாஸ் வீடு களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில்

6 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில்

இந்நிலையில் இந்த வார எவிக்ஷன் புராசஸிஸ்ற்கான நாமினேஷன் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை என 6 பேர் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கு நாமினேட் ஆயினர். இவர்களில் பள்ளிக்கூட டாஸ்க்கில் பிரியங்கா ஓவர் ஆட்டியூட் காட்டி பெயரை டேமேஜ் செய்துக் கொண்டார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

அவரை தொடர்ந்து அக்ஷரா ரெட்டியும் காரணமே இல்லாமல் கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் உடைத்து நொறுக்கினார். இதனால் அவர் மீது கடும் கோபம் அடைந்தனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து அவர்களில் யாராவது ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பதிவான வாக்குகள்

பதிவான வாக்குகள்

ஆனால் வைல்டு கார்டாக வந்த அமீர், தாமரை நடிக்கிறாரா? எனக்கு நெகட்டிவாகதான் தெரிகிறார் என அவருக்கு எதிராக பேசினார். இந்நிலையில் இந்த வாரம் பதிவான வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று பிரியங்கா டாப்பில் உள்ளார்.

டேஞ்சர் ஸோனில் தாமரை

டேஞ்சர் ஸோனில் தாமரை

அவரை தொடர்ந்து இமான் அண்ணாச்சி இரண்டாவது இடத்திலும், ஐக்கி பெர்ரி மூன்றாவது இடத்திலும், நிரூப் நான்காவது இடத்திலும் உள்ளனர். பாவனி ஐந்தாவது இடத்திலும் தாமரை குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்திலும் உள்ளார். இதனால் இந்த வாரம் தாமரை வெளியேற்றப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எப்படி வேண்டுமானாலும் மாறாலாம்

எப்படி வேண்டுமானாலும் மாறாலாம்

இருப்பினும் இன்று நள்ளிரவு வரை வாக்குகளை பதிவு செய்யலாம் என்பதால் வாக்கு எண்ணிக்கை மாறலாம் என்றும் கூறப்படுகிறது. பாவனிக்கும் தாமரை செல்விக்கும் சில நூறு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதனால் இறுதி முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என கூறப்படுகிறது.

கத்தி பேசும் தாமரை

கத்தி பேசும் தாமரை

தெருக்கூத்து கலைஞரான தாமரை செல்வி புதுக்கோட்டையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாமரை செல்வி மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார். சாதாரணமான விஷயத்திற்கு கூட சத்தமாக கத்தி பேசும் தாமரை இதுதான் தன் குணம் என கூறி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X