Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடடா... இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருக்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான்... பதறும் ரசிகாஸ்!
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விட்டது. விரைவில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அவர்தான்
எம்ஜிஆர்...அண்ணா
சொன்ன
சுவாரஸ்ய
தகவல்
ஆனால் இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என கொஞ்சமும் யூகிக்க முடியாத நிலையில் உள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி.

10 பேர் ஹவுஸ்மேட்ஸ்
இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது வரை பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்கா, பாவனி, சிபி, நிரூப், ராஜு, வருண், அக்ஷரா, சஞ்சீவ், தாமரை, அமீர் என 10 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதனால் கூட்டத்தை குறைக்க டபுள் எவிக்ஷன் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

நாமினேஷன் லிஸ்ட்டில் 6 பேர்
இந்நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, சிபி, நிரூப், வருண், அக்ஷரா ஆகிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர். 6 பேருமே முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அபினயை பயன்படுத்திக்கொண்ட பாவனி
பெரும்பாலான நெட்டிசன்கள், பாவனிதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறி வருகின்றனர். அபினய் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அவரை தனது சமையல் வேலை மற்றும் க்ளீனிங் டீம் வேலைக்கு எல்லாம் நன்றாக பயன்படுத்திக்கொண்ட பாவனி, அமீர் வந்த பிறகு தனக்கு அபினய்யை பிடிக்காது என்றார்.

முத்தம் கொடுத்த அமீர்
இதனால் பாவனிக்கு குறும்படம் போடும் அளவுக்கு போனது. அமீர் வந்த பிறகு அபினய்யை விட்டு விலகிய பாவனி, அமீருடன் நெருக்கமாக பழகினார். அமீர் தன்னை காதலிப்பதாக கூறியும் அவரிடம் கடுமையாக நடந்து கொள்ள மறுக்கிறார் பாவனி. அமீர் முத்தம் கொடுத்தப்போதும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை பாவனி.

வாக்கு எண்ணிக்கை லிஸ்ட்
இதனால் பாவனியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் தமிழ் கிளிட்ஸ் அன் அஃபிஷியல் வோட்டிங்கில் முதல் இடத்தில் பிரியங்காவும் இரண்டாவது இடத்தில் பாவனியும் உள்ளனர். சிபி மூன்றாவது இடத்திலும் நிரூப் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இந்த வாரம் இவரா?
கடைசி இரண்டு இடங்களான ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் உள்ளனர். இதனால் இந்த வாரம் வருண் அல்லது அக்ஷரா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோல் பிக்பாஸ் வோட்ஸ் தமிழில் பதிவான வாக்குகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

கடைசி இடத்தில் சிபி
அதன்படி, அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் நிரூப்பும் நான்காவது இடத்தில் அக்ஷராவும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் வருணும் ஆறாவது இடத்தில் சிபியும் உள்ளனர். இதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சிபி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி
இன்று வாக்களிக்க கடைசி நாள் என்பதால் வாக்கு எண்ணிக்கை எப்படி வேண்டுமானாலும் மாறும் என கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள போட்டியாளர்களின் பட்டியலில் வருண், அக்ஷரா மற்றும் சிபி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிபி டைட்டில் வின்னர் ஆக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் அவரது பெயர் டேஞ்சர் ஸோனில் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.