இந்த வாரம் யார் வெளியே போவாங்க? பிரியங்காவை கோர்த்துவிட பாரத்த கமல்... கலகல புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் கமல் ஹாசன் முன்பே பாவனியும் தாமரை செல்வியும் சண்டை போட்டுக் கொண்டனர்.

கமல் இருக்கிறார் என்பதை கூட மறந்து இருவரும் மாறி மாறி மல்லுக்கு நின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிரியங்காவிடம் இருந்து ஆரம்பிக்கலாம்

பிரியங்காவிடம் இருந்து ஆரம்பிக்கலாம்

இதில் பேசும் நடிகர் கமல் ஹாசன், இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகியிருக்கிறீர்கள். இதில் யார் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள் என ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்கிறார் கமல். தொடர்ந்து பேசும் கமல் பிரியங்காவிடம் இருந்தே ஆரம்பிக்கலாம் என்கிறார்.

நீங்க சொல்லுங்க நிரூப்

நீங்க சொல்லுங்க நிரூப்

இதனால் பதறும் பிரியங்கா, வேண்டவே வேண்டாம் என்று அலறுகிறார். பிரியங்கா வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிட முடியுமா என்று கூறி நிரூப் நீங்கள் ஆரம்பியுங்கள், யார் இந்த வாரம் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள் என்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.

வெளியேறப் போவது யார்?

வெளியேறப் போவது யார்?

இதனிடைய இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது அபினய் என்று தகவல் பரவி வந்தது. ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனான அபினய் ராமானுஜம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

அபினய் வெளியேறுவார்

அபினய் வெளியேறுவார்

தற்போது கமலின் சிபாரிசில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அபினய். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக இதுவரை எந்த பர்ஃபாமன்ஸும் செய்யவில்லை அபினய். இதனால் அவர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என கூறப்பட்டது.

ஸ்ருதி வெளியேறுவார்

ஸ்ருதி வெளியேறுவார்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஸ்ருதி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஆர்வத்துடன் விளையாடி வருபவர் ஸ்ருதி. மாடலான ஸ்ருதி கடைசி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X