Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறு போவது இவரா? வெளியான தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸின் கிராண்ட் ஃபினாலேவை எதிர்கொள்ள இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளது.
ஆனால் இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதை யூகிக்கவே முடியவில்லை. கடந்த சீசனில் ஆரிதான் வின்னர் என்பது கடைசி ஒரு மாதத்திலேயே உறுதியாகி விட்டது.
பிக்பாஸ்
தாமரையின்
கணவர்
எங்கே
வேலை
பார்க்கிறார்
தெரியுமா?
லீக்கான
போட்டோ!

ரூ. 5 லட்சம் பணம்
இம்முறை அனைத்து போட்டியாளர்களுமே டீசன்ட்டாக விளையாடுவதால் யார் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வார்கள் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேற விரும்பும் போட்டியாளர் யார் என்பது குறித்து ஒரு டாஸ்க் கொடுப்பார் பிக்பாஸ்.

5 லட்சம் ரூபாயுடன் புறப்பட்ட கேபி
கடந்த சீசனின் இந்த டாஸ்க்கை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேபிரியல்லா 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார். ரியோ 5 லட்சம் என்பது 10 லட்சம் ரூபாய் ஆனதும் வெளியேறலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரை முந்திக் பெட்டியுடன் வெளியேறினார் கேபி.

5 லட்சம் ரூபாயுடன் சென்ற கவின்
அதற்கு முந்தைய சீசனில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இந்நிலையில் இந்த சீசனில் அந்த வாய்ப்பை யார் பயன்படுத்திக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமீர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என கூறப்படுகிறது.

அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட்
அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்றுள்ளார். இதனால் அவர் டைட்டில் வின்னர் ஆவது சந்தேகம் என்பதால் அவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறுவார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள். யார் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறுவார் என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.