கன்ஃபெஷன் ரூம்மில் பேசியதை காட்டவே இல்லை... அந்தளவுக்கு அக்ஷராவை கழுவி ஊற்றினாரா பிக்பாஸ்?
சென்னை: அக்ஷராவிடம் பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூம்மில் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாததை பார்த்த நெட்டிசன்கள், அந்தளவுக்கு அக்ஷராவை கழுவி ஊற்றினாரா என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பள்ளிக்கூட டாஸ்க்கின் போது அக்ஷரா ரெட்டி கடுமையாக கோபப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசி ஆத்திரப்பட்டார்.
அதோடு மைக்கையும் கழட்டி வீசி கன்னா பின்னவென கத்தினார். அறிவு இருக்கா இல்லையா என்று ராஜுவையும் சிபியையும் திட்டி தீர்த்த அக்ஷரா , நாய் மாதிரி எல்லாம் இங்கு இருக்க முடியாது என விளாசினார்.

பிக்பாஸிடம் பேசிக் கொள்கிறேன்
அக்ஷராவின் பர்ஃபாமன்ஸால் நேற்றைய புரமோக்கள் வெளியானதில் இருந்து அவர் ட்ரெண்டிங்கில் இருந்தார். பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்து வாய்க்கு வந்தபடி பேசிய அக்ஷராவிடம், ராஜு சமாதானம் பேச முயன்றார். மைக்கை மாட்டும்படியும் கூறினார். ஆனால் அதற்கெல்லாம் அசராத அக்ஷரா, நான் பிக்பாஸிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்.

கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்த பிக்பாஸ்
மேலும் இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை, இப்படி இங்கு விளையாட வேண்டிய அவசியம் இல்லை, நான் கிளம்புகிறேன் என்றார். தொடர்ந்து டாஸ்க்கில் பங்கேற்காமல் அழுது கொண்டிருந்தார அக்ஷரா. அப்போது பிக்பாஸ் அக்ஷராவை கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்தார்.

காட்டப்படாத காட்சிகள்
அக்ஷராவும் கன்ஃபெஷன் ரூம்முக்குள் சென்றார். கன்ஃபெஷன் ரூம்முக்குள் இருந்து வெளியே வந்து அழுது கொண்டிருந்தார். ஆனால் கன்ஃபெஷன் ரூம்மில் பிக்பாஸ் என்ன கூறினார்? அதற்கு அக்ஷரா என்ன பதில் சொன்னார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கன்ஃபெஷன் ரூம்முக்குள் நடந்த காட்சிகள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை.

கழுவி ஊற்றினாரா பிக்பாஸ்?
ஆனால் அதன் பிறகு பள்ளிக்கூட டாஸ்க்கில் இணைந்தார் அக்ஷரா. இதனை பார்த்த நெட்டிசன்கள், கன்ஃபெஷன் ரூம்மில் அப்படி என்னதான் பேசினார் பிக்பாஸ்? ஏன் அதை மட்டும் காட்டவில்லை? காட்டக்கூடாத அளவுக்கு அக்ஷராவை கழுவி ஊற்றினாரா பிக்பாஸ் என கண்டமேனிக்கு கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











