அந்த இடுப்பழகியும்.. கவர்ச்சிப் புயலும்.. கலந்து கைகோர்த்தால்.. பரபரக்கப் போகும் பிக் பாஸ் 4!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.
தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்குவது வழக்கம்.

புரமோ வீடியோக்கள்
ஆனால் இம்முறை கொரோனா லாக்டவுடன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகி வருகிறது. ஆனால் இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டனர். இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் நாகார்ஜூனாவும் தொகுத்து வழங்குகின்றனர். இதற்கான டீசர் மற்றும் புரமோ வீடியோக்கள் அண்மையில் வெளியானது.

அடுத்த மாதம் முதல்
இந்நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என கொண்டு போகவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

கமல் சம்மதம்
கொரோனா லாக்டவுன் காரணமாக பழைய நிகழ்ச்சிகளை ரிப்பீட் மோடில் ஒளிப்பரப்பி வந்த விஜய் டிவி கடந்த 27ஆம் தேதி முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் செப்டம்பரில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இணையத்தில் கசிவு
அதன் அடிப்படையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது.

விரைவில் புரோமோ
அதில், நடிகை சுனைனா, அதுல்யா, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தங்களின் பங்கேற்பு குறித்து உறுதி செய்யவில்லை. இருப்பினும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவுக்கான ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











