சரியான திமிரு பிடிச்சவன்… அவனை பார்த்தாலே இரிட்டேட் ஆகுது… அபிஷேக்கை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் 3வது ப்ரோமோவில் இமான் அண்ணாச்சியிடம் எகிறிய அபிஷேக் ராஜாவை நெட்டிசன்ஸ்கள் கண்டமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.
இமான் அண்ணாச்சி கமலிடம் இதுவரைக்கும் வீட்டில் குரூப்பிசம் இல்லை ஆனால் திங்கட்கிழமைக்கு மேல வீட்டில் அரசியல் நடக்கலாம் என்று கூறியிருந்தார்.
இது உண்மைதான் என்பது போல இன்றைய ப்ரோமோவில் அண்ணாச்சியிடம் சண்டை போட்டு காட்டுத்தனமாக கத்தியுள்ளார் அபிஷேக்.

3வது ப்ரோமோவில்
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் அபிஷேக்கிற்கும் அண்ணாச்சிக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி, நீ பெரிய புத்திசாலிமாதிரி என்கிட்ட பேசாதே என்று சீறுகிறார் அண்ணாச்சி. அய்யோ.... போங்க அண்ணாச்சி சும்மா புத்திசாலி... புத்திசாலினு ஏன் என்னை தள்ளிக்கிட்டே இருக்குறீங்க... நீங்க தான் குரூப் சேர்க்குறீங்க... உங்களுக்கு ராஜு தான் முக்கியம்... நான் முக்கியம் இல்லைனா பரவால.. எனக்கு கவலையே இல்லை என்கிறார் அபிஷேக்.

மூளையே இல்லையா
இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அபிஷேக் என்ன இப்படி பேசுகிறார் என்று கருத்து கூறி உள்ளார். அவருடைய அனுபவம் இவன் வயசு.. Game சரியா ஆடுங்கனு சொல்ற ஒரே ஆளு இமான் அண்ணாச்சி மட்டும் தான்.. மூளைய கழட்டி வச்சிட்டு #BiggBossTamil5 குள்ள வந்துட்டாங்களா என்று கேட்டுள்ளார்.

இஷ்டத்துக்கு ஆடுனா
ஏற்கனேவே நெட்டிசன்ஸ்களுக்கு அபிஷேக் என்றாலே செம காண்டு எப்போ என்ன பேசுவானு காத்துக்கிட்டு இருப்பாங்க, இன்னைக்கு வேற அபிஷேக் எகுறிவிட்டாரா அவ்வளவு தான் அவரை வெச்சி செய்துள்ளார் ஒரு நெட்டிசன்ஸ்... நம்ம பண்றது தான் சரின்னு திரிஞ்சா .. அண்ணாச்சி சொல்ல தான் செய்வாரு.. இவனுங்க இஷ்டத்துக்கு ஆடுவானுங்க... 15 பேரு பாத்துக்கிட்டு இருக்கனுமா.. அண்ணாச்சி பண்ணது சரி போர்க்கொடி தூக்கி உள்ளார் ஒரு நெட்டிசன்ஸ்

மன்னிப்பு கேட்பான்
மற்றொரு இணையவாசி, அப்புறம் என்னப்பா நைட் அண்ணாச்சிக்கிட்ட போய் நீங்க அப்பா போல என்டு அழுது அபிஷேக் மன்னிப்பு கேட்பான் என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.

திமிரு பிடிச்சவன்
ப்ரோமோவை பார்த்து கோவமான ஒரு நெட்டிசன்ஸ். அபிஷேக் சரியான திமிரு பிடிச்சவன் இமான் அண்ணாச்சி வயசுல மூத்தவர்னு கூட மரியாதை கொடுக்க மாட்டேங்குறான் இவன் எல்லாம் என்ன கிழிச்சுட்டான்னு இவ்வளவு பேசுறான் என்று பதிவிட்டுள்ளார்.

இரிட்டேட் ஆகுதுனு
மற்றொரு நெட்டிசன்ஸ், எனக்கு மட்டும் தான் அவனை பார்த்தா இரிட்டேட் ஆகுதுனு நினைச்சேன்... இவ்ளே பேர் இருக்காங்களா என்று கேட்டுள்ளார்.

அப்பவே கேட்டானா
மற்றொரு நெட்டிசன்ஸ், அப்பவே..சொன்னேன்! கேட்டானா..? போயி 2 வாரம் கூட ஆகல்ல.. இப்பயே எல்லோரும் காறி துப்ப தொடங்கிட்டாங்க என்று அபிஷேக்கை விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











