வெறும் வாயில வடை சுட்டு விற்கும்… வடை வியாபாரி நம்ப அபிஷேக்.. பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், இந்த வாரம் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இதில் இந்த வார எலிமினேஷனிலிருந்து தப்பித்துக்கொள்ள பஞ்சதந்திரம் டாஸ்க்கை போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் 3வது ப்ரோமோவில், ஸ்ருதியிடம் செமயாக நோஸ்கட் வாங்குகிறார் அபிஷேக். இதனால் நெட்டிசன்ஸ் அபிஷேக்கை குறித்து கமெண்ட்டுகளை வைரலாக்கி வருகின்றனர்.

விளையாடவே தெரியாது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில், அபிஷேக் என் டீமில் விளையாடு, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, ஆன அதுக்கு நீ ஒத்துக்கமாட்ட, மெஜாரிட்டி கைவிட்டு போகக்கூடாது நல்ல யோசி என்கிறார். இதற்கு ஸ்ருதி நான் இசைவாணிக்கூட இருக்கிறேன் என்கிறார். அதற்கு அபிஷேக் அவளுக்கு விளையாடவே தெரியாது நீ என்கூட வா என்கிறார்.

அடங்கவே மாட்டான்
இதற்கு ஸ்ருதி, பாவனி ஸ்ட்ராங் ப்ளேயர்... நாங்க வீக் ப்ளேயரா என்று கேட்டு நோஸ்கட் கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எத்தனை வாட்டி மொக்கை வாங்கினாலும் அபிஷேக் மட்டும் அடங்கவே மாட்டான் என்று வழக்கம் போல அவரை வைத்து உருட்டி வருகின்றனர்.

செம மொக்கை
இணையவாசி ஒருவர் எப்படித்தான்...மொக்க மேல மொக்க வாங்கி இவ்வளவு எனர்ஜியா இருக்கானோ... மெய்யாலுமே இவன் வேறமாதிரி தான் என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

அழுவாங்க மச்சான்
மற்றொரு நெட்டிசன்ஸ். சிபி அபிஷேக்கை பங்கம் பண்ணியதை, மச்சான் நீ போய்ட்டா BB5ல இருக்குறவங்க எல்லாரும் அழுவாங்கடானு பகிர்ந்துள்ளார்.

மோசமான போட்டியாளர்
மற்றொரு நெட்டிசன், அபிஷேக் யாரு...? மோசமான போட்டியாளர்.... ட்ரிக்கர் சக்திக்கு மேல மோகன்வைத்யாவுக்கு நடுவுல என்று பகிர்ந்துள்ளார்.

வடை வியாபாரி
அபிஷேக்கின் மோசமான பேச்சால் கடுப்பான ஒரு நெட்டிசன்... வெறும் வாயில வடை சுட்டு விற்கும் வியாபாரி நம்ப அபிசேக்குனு மோசமாக கலாய்த்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











