வீட்டை துடைச்சு கழுவுங்கப்பா சீக்கிரம்.. விரைவில் பிக் பாஸ் 5.. ஆரம்பித்தது பூர்வாங்க வேலைகள்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியில் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

கமல் தொகுப்பாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களையும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4
முந்தைய மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தொடங்கிய நிலையில் கடந்த 4வது சீசன் மட்டும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கியது. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

பிக்பாஸ் சீசன் 5
இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டில் வின்னர் ஆனார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாத இறுதியில்..
அதாவது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் இதற்கான முதற்கட்ட வேலைகளான பேப்பர் வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நிகழ்ச்சி குழு முடிவு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் கமல் அரசியலில் பிஸியாக இருப்பார் என்பதால் தேர்தலுக்கு பிறகு வரும் ஜூன் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications