சேஃப் கேம் ஆடுறீங்க... தூண்டிவிட்ட அமீர்... டென்ஷனான சிபி... பிபியை எகிற வைக்கும் பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் ஃபினாலே ரேஸ் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு போட்டியாளர்களை தங்களுக்கு தாங்களே ரேங்க் கொடுத்து கொள்ளுமாறு கூறுகிறார் பிக்பாஸ்.
இதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் இடத்தை பிடிக்க தகுந்த காரணங்களை கூறி வருகின்றனர். இவை இன்று வெளியான மூன்று புரமோக்களில் தெரிய வந்தது.

நம்பர் ஒன்னில் சிபி
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ இன்று வெளியாகியுள்ளது. இதில் அமீர், சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. தனக்கு நம்பர் ஒன் இடத்தை தேர்வு செய்யும் சிபி அந்த இடத்தில் ஏறி நிற்கிறார்.

புரிஞ்சுட்டு வந்து பேசுங்க
அப்போது நம்பர் ஒன் இடத்தில் நிற்க அவருக்கு தகுதியில்லை என ஆர்க்யூ செய்யும் அமீர், நீங்கள் சேஃப் கேம் ஆடுகிறீர்கள் என்று கூறுகிறார். இதனை ஏற்காத சிபி, கொஞ்சம் புரிஞ்சுட்டு வந்து பேசுங்க, எல்லாருக்கிட்டேயும் பேசுற மாதிரி பேசாதீங்க என்று கூறுகிறார்.

டெக்ஷனான அமீர்
அதற்கு பதிலளிக்கும் அமீர் எனக்கு புரிந்ததால் தான் பேசுகிறேன். உங்களை பற்றி பேசுகிறேன் என்றால் நீங்கள் என்னை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்கிறார். அதற்கு சிபி எதிர் வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் டென்ஷனாகும் அமீர் நீ சேஃப் கேம் ஆடுறன்னு தான் எனக்கு தோனுது என்று தாடாலடியாக பேசுகிறார்.

தலையிட்ட சஞ்சீவ்
மேலும் எதுக்கு பாவனியை பற்றி பேசுகிறாய் என்றும் சிபியிடம் ஆவேசமாக கத்துகிறார் அமீர். அப்போது குறுக்கிடும் சஞ்சீவ், இவருக்கிட்ட பேசும் போது இவரு பத்தி மட்டும்தான் பேசணும் பாவனி பத்தி பேசியிருக்க கூடாது, அதற்கு சாரி கேள் என்று கோபமாக கத்துகிறார்.

அனல் பறக்கும் போல
அதனை ஏற்காத சிபி தோன்றியதைதான் பேசினேன் எல்லாவற்றுக்கும் சாரி கேட்க முடியாது என்று பதிலடி கொடுக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றைய எபிசோடு அனல் பறக்கும் போல என்று தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











