அட கடவுளே.. 30 பேருக்கிட்டேயும் பிக்பாஸுக்கு காண்ட்ராக்ட் பேசியிருக்காங்களாம்.. வெளியான புதிய தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Recommended Video
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சூடாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஏறத்தாழ உறுதி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் இவர்கள்தான் என்றும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கன்ஃபார்ம் ஆகிவிட்டார் என்றும் தினமும் ஒரு பிரபலத்தின் பெயர் வெளியாகி வருகிறது. நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தான்.

உறுதியான பிரபலங்கள்
அந்த வகையில் ஏற்கனவே அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் நடிகைகள் சனம் ஷெட்டி, கிரண், ரேகா, விஜே அர்ச்சனா மற்றும் நடிகர் ஆரி, சிங்கர் அஜித் ஆகியோரின் பெயர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தகவல்
கொரோனா பரிசோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

30 பிரபலங்கள்
அதாவது பிக்பாஸ் தொடர்பாக 30 பிரபலங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த 30 பேருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால், கடைசி நேரத்தில் தான் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்றம் தகவல் வெளியாகியுள்ளது.

தயக்கம் காட்டுவதால்
ஒருவருக்கொருவர் தெரியாமலேயே சோதனைகள் நடத்தப்பட்டு எதற்கும் தாயராக இருக்கும்படி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயக்கம் காட்டுவதால் 30 பேரிடமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபனிங் எபிசோட்
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஓபனிங், எபிசோட் குறிப்பிட்ட சில போட்டியாளர்களை வைத்து காட்சியாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த எபிசோடில் கடந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











