பிக்பாஸ் சீசன் 5: அந்த பிரபலத்திடமும் தீவிர பேச்சு.. இந்த முறையும் விஜய் டிவி புராடெக்ட்ஸ்தானா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க மேலும் ஒரு பிரபலத்திடம் நிகழ்ச்சிக்குழு தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
சண்டை சச்சரவுகள் நிறைந்து இருந்தாலும் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குறைந்தது 15 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.

சினிமாவை சேர்ந்தவர்கள்
இடையிடையே வைல்டு கார்டு என்ட்ரிகளும் வருவார்கள். போட்டியாளர்கள் அனைவருமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்தவர்கள், மாடலிங், இசை என எப்படியோ சினிமாத்துறையை சேர்ந்தவர்களாக தான் இருந்துள்ளனர்.

விஜய் டிவி புராடெக்ட்ஸ்
அதன்படி இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களிலுமே விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் அதிகம் பங்கேற்றுள்ளனர். அதிலும் கடந்த சீசனில் ரியோ, நிஷா, கேபி, சோம், ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன், ரேகா என முழுக்க முழுக்க விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களே அதிகம் பங்கேற்றிருந்தனர்.

சிம்புவிடம் பேச்சு
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வரும் ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் இம்முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

மேலும் ஒரு பிரபலம்
மேலும் பிரபல நடிகரான நகுலை போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது, விஜய் டிவியின் மற்றொரு பிரபலத்திடமும் நிகழ்ச்சிக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறையும் விஜய் டிவியா?
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கனியிடம் நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த ரசிகர்கள் இம்முறையும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகம் பங்கேற்க போகிறார்களா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











