பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போகும் பிரபல ஆர்ஜே? அப்போ 100% எண்டெர்டெய்ன்மென்ட் கன்ஃபார்ம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5ல் பிரபல ஆர்ஜே ஒருவர் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஜனவரி மாதம் வரை இழுக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5யையாவது உரிய நேரத்தில் தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் இறங்கியுள்ளது பிக்பாஸ் டீம்.

தொகுப்பாளர் மாற்றம்

தொகுப்பாளர் மாற்றம்

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் முதல் பங்கேற்க போகும் போட்டியாளர் வரை பலரிடமும் நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

நகுல் மறுப்பு

நகுல் மறுப்பு

அதனை தொடர்ந்து காதலில் விழுந்தேன், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்த நகுலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் தான் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என மறுத்துவிட்டார் நடிகர் நகுல்.

கனி, சுனிதாவிடம் பேச்சு

கனி, சுனிதாவிடம் பேச்சு

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி பிரபலங்களான கனி மற்றும் சுனிதாவிடமும் பிக்பாஸ் டீம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து இருவரின் தரப்பில் இருந்தும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தெருக்குரல் அறிவு

தெருக்குரல் அறிவு

இதனை தொடர்ந்து முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் யூட்யூப் பிரபலமுமான இனியனிடமும் நிகழ்ச்சிக் குழு பேசி வருவதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடல் பிரபலமான தெருக்குரல் அறிவு பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல ஆர்ஜே

பிரபல ஆர்ஜே

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல ஆர்ஜேவும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலின் நிறுவனருமான ஆர்ஜே வினோத்திடமும் நிகழ்ச்சிக் குழு பேசி வருவதாக தெரிகிறது.

என்டெர்டெய்ன்மென்டுக்கு கேரண்டி

என்டெர்டெய்ன்மென்டுக்கு கேரண்டி

இதனை அறிந்த நெட்டிசன்கள் ஆர்ஜே வினோத் நகைச்சுவையாக பேசக்கூடியவர் டைமிங்கில் காமெடி செய்பவர் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று கூறி வருகின்றனர். இதனிடையே வாய்ப்புக்காக காத்திருக்கும் சில சின்னத்திரை நடிகைகளிடமும் பிக்பாஸ் டீம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X