Just In
- 4 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 16 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- News
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலியை கழட்டிவிட்ட கையோடு சாண்டி வீட்டு விசேஷத்தில் ஜோடியாய் பங்கேற்ற தர்ஷன்.. யார் கூடனு பாருங்க!
சென்னை: காதலியை கழட்டி விட்ட கையோடு தர்ஷன் ஷெரினுடன் ஜோடியாய் சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடலான இவர், நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியை காதலித்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தெரிய வந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகின.

ஏமாற்றிய தர்ஷன்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தர்ஷன் மீது காதலியான சனம் ஷெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். மேலும் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் ஆதாரங்களாக காண்பித்தார்.
|
இரவு முழுக்க பார்ட்டி
அதோடு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் தன்னை இணைத்து தவறாக பேசுவதாகவும் கண்ணீர் மல்க கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், சனம் ஷெட்டிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் இன்னமும் தொடர்பு உள்ளது என்றும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருவரும் இரவு முழுக்க பார்ட்டியில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

திருமணம் செய்ய முடியாது
மேலும் அவர் பிகினி போட்டோ ஷுட் நடத்தியது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு தன்னை வைத்து படம் பண்ண இருந்த தயாரிப்பாளர்களிடம் தன்னை பற்றி தவறாக பேசி தனது வாழ்க்கையை கெடுக்க பாத்தார் என்றும் தர்ஷன் கூறினார்.
|
நடன பள்ளி
அவரது இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி காட்டுப்பாக்கத்தில் தனது நடன பள்ளி ஒன்றை திறந்துள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஷெரினுடன் ஜோடியாக
இதில் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன், ஷெரின், ரேஷ்மா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்ஷன் சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக்கொண்ட பிறகு, முதல் முறையாக சாண்டி வீட்டு விசேஷத்தில் பங்கேற்றுள்ளார். இதில் தர்ஷன், ஷெரினுடன் ஜோடியாக பங்கேற்றது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பிரிய காரணம்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் நெருக்கமாக பழகினர். ஷெரின், தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார். தர்ஷனுக்காக காதல் கடிதம் எல்லாம் எழுதினார் ஷெரின். தர்ஷனும் நட்பு என்று வாய் வார்த்தையாக கூறினாலும் அந்த எல்லையை மீறியே பழகினார். இதனால் சனம் ஷெட்டி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தர்ஷன் சனம் ஷெட்டியை பிரிந்ததற்கு கூட ஷெரின், அபிராமி ஆகியோர்தான் காரணம் என கூறப்பட்டது.